சொந்த மைதானத்தில் வைத்து பெஸ்ட் ஸ்பெல்லுடன் செஞ்சுரி அடித்த முகமது சிராஜ் – அசத்தல் சாதனை

Siraj
- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த முகமது சிராஜ் கடந்த 2024 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த கையோடு அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் கலந்து கொண்ட முகமது சிராஜை குஜராத் டைட்டன்ஸ் அணியானது 12 கோடியே 25 லட்ச ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

சொந்த மைதானத்தில் சாதனை நிகழ்த்திய முகமது சிராஜ் :

அதனை தொடர்ந்து தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது சிராஜ் இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்துகிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் இடம்பெறாத அவர் மீண்டும் வலுவான கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக முகமது சிராஜின் சொந்த மாநில மைதானமான ஹைதராபாத் மைதானத்தில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 4 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அதிலும் குறிப்பாக ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்களான அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் மற்றும் அனிகீத் வர்மா, சிமர்ஜீத் சிங் என முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தார். இதன் காரணமாக அவருக்கு நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

- Advertisement -

அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடரில் இதுதான் அவரது சிறந்த பந்துவீச்சாகவும் அமைந்தது. அதோடு கூடுதல் போனஸாக அவரது சொந்த மைதானத்தில் வைத்தே தற்போது மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : போன மேட்ச்சே வாஷிங்க்டன் சுந்தர் வரவேண்டியது.. ஆனா ரூல்ஸ் ஒத்துவரல – வெற்றிக்கு பின் சுப்மன் கில் பேச்சு

அந்த வகையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் அறிமுகமான அவர் இதுவரை 97 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்டுகளை வீழ்த்தி 100 விக்கெட்டுகளுக்கு மேல் ஐ.பி.எல் போட்டிகளில் கைப்பற்றிய இந்திய வீரராகவும் அந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement