போன மேட்ச்சே வாஷிங்க்டன் சுந்தர் வரவேண்டியது.. ஆனா ரூல்ஸ் ஒத்துவரல – வெற்றிக்கு பின் சுப்மன் கில் பேச்சு

Gill
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-ஆவது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜரா டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

வாஷிங்க்டன் சுந்தர் உண்மையிலேயே அசத்திட்டாரு : சுப்மன் கில் பாராட்டு

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 31 ரன்களையும், கிளாஸன் 27 ரன்களையும் குவித்தனர். பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது :

- Advertisement -

16.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 153 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 61 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 49 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் :

உண்மையிலேயே இந்த வடிவத்தில் பவுலர்கள் கேம் சேஞ்சர்களாக இருக்கிறார்கள். நம்மில் பலரும் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்களை பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் பந்துவீச்சாளர்களும் போட்டியை வென்று கொடுக்கிறார்கள். இந்த போட்டியில் எங்களது சிறப்பான பந்துவீச்சே வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக நினைக்கிறேன். அதேபோன்று பேட்டிங்கிலும் நாங்கள் இந்த மைதானத்திற்கு ஏற்ப ஷாட்களை விளையாடியதாக உணர்கிறேன்.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தரும் நானும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தோம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலேயே வாஷிங்டன் சுந்தர் களமிறங்க வேண்டியது. ஆனால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறைகளால் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்ததாலேயே வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால் இன்றைய போட்டியில் அவருக்கு பிளேயிங் லெவனிலேயே வாய்ப்பு கொடுக்க நினைத்தோம்.

இதையும் படிங்க : ஹைதெராபாத் மாதிரியே இல்லை.. அது ஏமாத்திடுச்சு.. குஜராத்திடம் தோற்க இதான் காரணம்.. கேப்டன் கமின்ஸ் பேட்டி

அதேபோன்று அவரும் பேட்டிங்கில் மிகச்சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பந்துவீச்சில் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக செயல்பட்டு எங்களை போட்டியின் ஆரம்பத்திலேயே ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டார் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement