IPL 2023 : ஆக்சன், லேண்டிங், வேகம் எதுவுமே சரில்ல – முன்னேறலைனா காணாம போயிடுவீங்க, அர்ஜுன் பற்றி முன்னாள் பாக் வீரர் விமர்சனம்

Arjun-Tendulkar-1
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அந்த அணியில் பும்ரா, ஆர்ச்சர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியதால் ஒரு வழியாக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். மும்பையின் அடையாளமாக கருதப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அவர் இடதுகை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று தன்னுடைய தந்தையின் ஆசைக்கிணங்க பயிற்சிகளை துவங்கி கடந்த சில வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் நெட் பவுலராக செயல்பட்டார்.

இருப்பினும் ஜாம்பவானின் மகன் விரைவாக வாய்ப்பு பெற்று விட்டார் என்ற பெயர் வரும் என்பதற்காக அலைக்கழிக்கப்பட்ட அவர் கடந்த ரஞ்சி கோப்பையில் கோவா அணிக்காக விளையாடி சதமடித்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் தற்போது நல்ல அனுபவத்தை கொண்டுள்ள அவர் இந்த வருடம் கொல்கத்தாவுக்கு எதிராக அறிமுகமாகி 2 ஓவர்களை வீசி விக்கெட்டுகளை எடுக்காத நிலையில் ஹைதராபாத்துக்கு எதிரான 2வது போட்டியில் குறைந்த ரன்களை கொடுத்து முதல் விக்கெட்டை எடுத்தது ரோகித் சர்மா, சச்சின் உள்ளிட்ட அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

காணாம போயிடுவீங்க:
குறிப்பாக கடைசி ஓவரில் 20 ரன்களை கட்டுப்படுத்தும் போது புவனேஸ்வர் குமாரை அவுட்டாக்கிய அவரை வரும் போட்டிகளில் டெத் ஓவர்களில் பயன்படுத்துவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா மறைமுகமாக தெரிவித்தார். ஆனால் வித்தியாசமான ஆக்சனை கொண்டுள்ள அவர் ஓடி வரும் வேகத்துக்கு நிகரான வேகத்தில் வீசாமல் சராசரியாக வெறும் 120 – 125 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசுகிறார். குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் கடைசி பந்தில் சோர்ந்து போய் 107 கி.மீ என்ற ஸ்பின்னரை விட குறைவான வேகத்தில் வீசிய அவரை புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக ரிங்கு சிங் போன்ற இளம் பேட்ஸ்மேன்கள் இருந்திருந்தால் கூட சரமாரியாக அடித்திருப்பார்கள் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ஆக்சன், சீரமைப்பு , வேகம் ஆகியவற்றில் அர்ஜுன் டெண்டுல்கர் நேர்த்தியாக இல்லை என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் பந்தை ரிலீஸ் செய்யும் லேண்டிங் இடத்தில் அவருடைய உடல் பிட்ச்சுக்கு உள்ளே செல்வதற்கு பதிலாக வெளியே வருவதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே ஆரம்ப கட்டத்தில் இளம் வீரராக இருக்கும் அவர் நீடித்து விளையாடுவதற்கு விரைவில் இவற்றில் முன்னேற்றம் காண வேண்டும் என்று ரசித் லதீப் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் மும்பை அணியில் சச்சினின் மேற்பார்வையில் விளையாடுவது அர்ஜுனின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்பதையும் வெளிப்படையாக கூறியுள்ள அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அவர் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருக்கிறார் என்பதால் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். ஏனெனில் அவருடைய சீரமைப்பு நன்றாக இல்லை. அவரால் பந்து வீச்சில் வேகத்தை உருவாக்க முடியவில்லை”

“ஒரு நல்ல பயோ மெக்கானிக்கல் ஆலோசகர் சிறப்பாக வழி நடத்தினால் அவர் தனது பந்து வீச்சில் சிறிது வேகத்தை சேர்க்கலாம். இருப்பினும் கூட ஒரு வீரரை பயிற்றுவிப்பது மற்றும் மாற்றுவது கடினமான விஷயமாகும். அதை சச்சின் செய்திருக்கலாம். ஆனால் அதை செய்ய அவர் உள்ளூர் கிரிக்கெட்டை சார்ந்திருக்கிறார். எந்த துறையிலும் நீங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு அடிப்படை வலுவாக இருக்க வேண்டும்”

- Advertisement -

“ஆனால் பந்தை வீச லேண்டிங் ஆகும் போது அவர் உள்ளே வருவதற்கு பதிலாக வெளியே செல்கிறார். அவருடைய பேலன்ஸ் நன்றாக இல்லை என்பதே அவருடைய வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருக்கும் அவர் 135 கி.மீ வரை செல்லலாம். நல்ல பேட்ஸ்மேனான அவர் இன்னும் 2 – 3 வருடங்களில் நல்ல வீரராக உருவெடுக்கலாம்”

இதையும் படிங்க:IPL 2023 : என்ன இருந்தாலும் சஞ்சு சாம்சனை விட அவர் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன் – ரசிகர்கள் எதிர்க்கும் இந்திய வீரருக்கு சேவாக் ஆதரவு

“இருப்பினும் ஒருவேளை ஹைதராபாத் போன்ற வேறு அணிகளில் விளையாடியிருந்தால் அவருடைய அணுகுமுறை வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் தற்போது அவருடைய தந்தை உடைமாற்றும் அறையில் இருக்கிறார். எனவே தந்தையின் பாசமான வேலைகள் அவருடைய வாழ்க்கையில் இருக்கும்” என்று கூறினார்.

Advertisement