IPL 2023 : என்ன இருந்தாலும் சஞ்சு சாம்சனை விட அவர் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன் – ரசிகர்கள் எதிர்க்கும் இந்திய வீரருக்கு சேவாக் ஆதரவு

Virender Sehwag Sanju Samson
Advertisement

கர்நாடகவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாற்றமாக செயல்பட்டாலும் 2018 வாக்கில் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக சரவெடியாக விளையாடி இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்தார். மேலும் இளம் வீரராக இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக இந்தியாவின் அடுத்த கேப்டனாக பிசிசிஐ உருவாக்க நினைத்த அவரின் ஐபிஎல் மார்க்கெட் 17 கோடி உயர்ந்தது. அதனால் நாளடைவில் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடிய ராகுல் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்து தனது அணிக்காக அல்லாமல் ஆரஞ்சு தொப்பிக்காக விளையாடுவதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.

LSG vs RR

அதே போல் இந்தியாவுக்காகவும் பேட்டிங் செய்த அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் எழுந்த உச்சகட்ட விமர்சனங்களை தாங்க முடியாத பிசிசிஐ அவரின் ஓப்பனிங் இடத்தையும் துணை கேப்டன்ஷிப் பதவியைப் பறித்து விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை கொடுத்துள்ளது. எனவே இழந்த தனது இடத்தை மீண்டும் பிடிக்க இந்த சீசனில் அதிரடியாக விளையாட வேண்டிய அவர் கொஞ்சமும் முன்னேறாமல் 8 (12), 20 (18), 35 (31), 18 (20), 74 (56), 39 (32) என 194 ரன்களை 114.79 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வருகிறார்.

- Advertisement -

சேவாக் ஆதரவு:
மறுபுறம் 2015இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி 2வது போட்டியை 2019இல் விளையாடி 2021 வரை நிலையற்ற வாய்ப்புகள் பெற்று வந்த சஞ்சு சாம்சன் 2022 ஐபிஎல் சீசனில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 2008க்குப்பின் கேப்டனாக ராஜஸ்தானை ஃபைனலுக்கு சென்றார். அதனால் 2022இல் இந்தியாவுக்காக கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருந்தும் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ள அவர் இந்த சீசனில் 159 ரன்களை 160.61 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.

Sanju Samson

குறிப்பாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் உலகின் நம்பர் ஒன் டி20 ஸ்பின்னர் ரசித் கானை ஹாட்ரிக் சிக்ஸர்களாக பறக்க விட்ட அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமாக இருப்பதாக பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் என்ன இருந்தாலும் சர்வதேச அளவில் சஞ்சு சாம்சனை விட கேஎல் ராகுல் சிறந்த பேட்ஸ்மேன் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ரசிகர்கள் எதிர்பாராத கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த சீசனில் கேஎல் ராகுல் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அவர் கடந்த போட்டியில் பெரிய ரன்களை (74) அடித்தார். இருப்பினும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் அனைவரது எதிர்பார்ப்புக்கு நிகராக இல்லாதது உண்மை தான். ஆனாலும் அவர் ஃபார்முக்கு திரும்புவது நல்ல அறிகுறியாகும். மேலும் இந்திய அணியில் உங்களுக்கான இடம் என்று வரும் போது சஞ்சு சாம்சனை விட கேஎல் ராகுல் சிறந்த வீரர் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி நிறைய வெளிநாடுகளில் சதங்கள் அடித்துள்ளார்”

Sehwag

“அதே போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் தொடக்க வீரராகவும் மிடில் ஆர்டரிலும் விளையாடி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள அவர் டி20 கிரிக்கெட்டிலும் நல்ல ரன்களை அடித்துள்ளார்” என்று கூறினார். அதாவது ஐபிஎல் அளவில் சஞ்சு சாம்சன் அசத்தினாலும் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக கேஎல் ராகுல் தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக சேவாக் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க:IPL 2023 : உங்களுக்காவவே லக்னோ தோக்கணும்ன்னு வேண்டிக்கிறேன் – கேஎல் ராகுலை வெளிப்படையாக சாடிய முன்னாள் வீரர்

இருப்பினும் கடந்த சில வருடங்களில் 10க்கு ஓரிரு போட்டிகளில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டும் ராகுலுக்கு கிடைக்கும் தொடர்ச்சியான வாய்ப்புகள் சஞ்சு சாம்சனுக்கு ஏன் கிடைப்பதில்லை வாய்ப்பு கிடைத்தால் தானே அவராலும் அசத்த முடியும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Advertisement