IPL 2023 : உங்களுக்காவவே லக்னோ தோக்கணும்ன்னு வேண்டிக்கிறேன் – கேஎல் ராகுலை வெளிப்படையாக சாடிய முன்னாள் வீரர்

KL-Rahul-1
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் மட்டும் மந்தமாக செயல்பட்டு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்து வருகிறது. 2018 காலகட்டங்களில் அதிரடியாக விளையாடி இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்த அவரை வருங்கால கேப்டனாக உருவாக்க பிசிசிஐ முடிவெடுத்தது. அதனால் அவருடைய ஐபிஎல் மார்க்கெட்டும் விராட் கோலியை மிஞ்சி 17 கோடி என்ற உச்சத்தை எட்டியது. ஆனால் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் பெரிய ரன்களை எடுத்தாலும் அதை குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த ராகுல் ஆரஞ்சு தொப்பிக்காக விளையாடுகிறாரே தவிர தன்னுடைய அணியின் வெற்றிக்காக விளையாடுவதில்லை என்று ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர்.

அந்த நிலையில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் கடுப்பான ரசிகர்களைப் போலவே அதிருப்தியடைந்த பிசிசிஐ அவருடைய துணை கேப்டன்ஷிப் பதவி மற்றும் ஓப்பனிங் இடத்தை பறித்து மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பு மட்டும் கொடுத்துள்ளது.

- Advertisement -

லக்னோ தோற்கணும்:
அதனால் இழந்த தன்னுடைய இடத்தையும் ஃபார்மையும் மீட்டெடுக்க இந்த சீசனில் அதிரடியாக விளையாட வேண்டிய கேஎல் ராகுல் கொஞ்சம் கூட முன்னேறாமல் மீண்டும் 8 (12), 20 (18), 35 (31), 18 (20), 74 (56), 39 (32) என 194 ரன்களை 114.79 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வருகிறார். குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிராக ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் அடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் அவர் தடுப்பாட்டம் விளையாடியது அனைத்து ரசிகர்களையும் கடுப்பாக வைத்தது.

சொல்லப்போனால் பவர் பிளே ஓவர்களில் ராகுல் விளையாடுவதை பார்ப்பது தன்னுடைய வாழ்வில் அலுப்பு தட்டக்கூடிய ஒன்று என முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் நேரலையில் விமர்சித்தார். அப்போட்டியில் 2 கேட்ச் வாய்ப்புகளை ராஜஸ்தான் நழுவ விட்டும் கடைசி வரை அதிரடியை துவங்காத அவர் 39 (32) ரன்களில் அவுட்டாகி லக்னோவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

நல்ல வேளையாக கடைசி நேரத்தில் பூரான் 29 (20) ரன்களும் ஸ்டோனிஸ் 21 (16) ரன்களையும் அதிரடியாக எடுத்ததால் தப்பிய லக்னோ 154/7 ரன்கள் சேர்த்தது. இருப்பினும் கூட வெற்றிக்கு 20 ரன்கள் குறைவாக பார்க்கப்பட்ட அந்த இலக்கை துரத்தும் போது பட்லர், சாம்சன், ஹெட்மயர் போன்ற முக்கிய ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் தடுமாற்றமாக செயல்பட்டதுடன் பவுலர்களின் உதவியால் லக்னோ 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆனால் 160 என்பது நல்ல இலக்காக இருந்திருக்கும் என்பதால் 10 ரன்கள் குறைவாக எடுத்தோம் என்று போட்டியின் முடிவில் கேஎல் ராகுலை வெளிப்படையாக தெரிவித்தார். ஒருவேளை ஆரம்பத்திலேயே சற்று அதிரடியாக அவர் விளையாடியிருந்தால் நிச்சயமாக 10 ரன்கள் மட்டுமல்ல 20 ரன்களை லக்னோ எக்ஸ்ட்ராக எடுத்திருக்கும். ஆனாலும் அதை தெரிந்தும் தொடர்ந்து இப்படி மெதுவாக விளையாடி வரும் அவர் தலைமையில் இதுவரை பங்கேற்ற 6 போட்டியில் 4 வெற்றிகளை பெற்றுள்ள லக்னோ புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

- Advertisement -

அதனால் தன்னுடைய தடவல் பேட்டிங் அணுகுமுறை சரிதான் என்று மீண்டும் நேற்றைய போட்டியின் முடிவில் ராகுல் பேசினார். அதனால் கடுப்பான முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் ஒருவேளை லக்னோ தோற்றால் தான் உண்மையை உணர்ந்து ராகுல் அதிரடியாக விளையாடுவார் என்று கூறியுள்ளார். அதனால் ராகுலுக்காகவே அடுத்து வரும் போட்டிகளில் லக்னோ தோற்க வேண்டுமென வெளிப்படையாக தனது ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: ரியான் பராக் பார்மில் இல்லை. ஆனாலும் அவருக்காக நாங்க வச்சிருக்க திட்டம் இதுதான் – சங்கக்காரா ஓபன்டாக்

“இப்படி மெதுவாக விளையாடும் ராகுல் பேசாமல் மிடில் ஆர்டரில் விளையாடலாம். குறிப்பாக 2018 போல அதிரடியாக விளையாடாமல் போனால் இந்தியாவுக்காகவும் அவர் ஓப்பனிங்கில் விளையாடக் கூடாது. இத்தகைய அதிரடி எண்ணமில்லாத சிந்தனையற்ற பேட்டிங்கை நீங்கள் நீண்ட நேரம் தாங்க முடியாது. அத்துடன் லக்னோ அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியுற்றால் தவிர ராகுல் அதிரடியாக பேட்டிங் செய்ய மாட்டார். எனவே இந்தப் போட்டியில் லக்னோ தோற்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement