ரியான் பராக் பார்மில் இல்லை. ஆனாலும் அவருக்காக நாங்க வச்சிருக்க திட்டம் இதுதான் – சங்கக்காரா ஓபன்டாக்

Sangakkara
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணியானது ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கினை துரத்திய ராஜஸ்தான் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் மட்டுமே குவித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

LSG vs RR

ராஜஸ்தான் அணியின் இந்த தோல்வி அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் ஆட்டம் இழந்ததும் அடுத்தடுத்து பின்வரிசையில் அனைவருமே வந்த வேகத்தில் நடையை கட்டியது ஏமாற்றத்தை அளித்தது. அதிலும் குறிப்பாக இளம் வீரர் ரியான் பராக் எந்த ஒரு போட்டியிலும் சிறப்பாக விளையாடாத வேளையில் அவருக்காக தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

நேற்று ராஜஸ்தான அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல நல்ல வாய்ப்பு இருந்தும் ரியான் பராக் 12 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 15 ரன்கள் மட்டுமே குவித்தார். இப்படி அவரது ஆட்டம் போட்டிக்கு போட்டி மாசமாக இருப்பதினால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

parag 2

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து ரியான் பராக் குறித்து சில கருத்துக்களை ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்ககாரா பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் சங்கக்காரா கூறியதாவது : இந்த போட்டியில் எங்களது அணி சேசிங்கின் போது சிறப்பாக ரன்களை குவிக்க ஆரம்பித்திருந்தாலும் மிடில் ஆர்டரில் ரன் குவிக்க முடியாமல் தோல்வியை சந்தித்ததில் வருத்தம் தான்.

- Advertisement -

லக்னோ வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அதே போன்று இந்த ஆட்டத்தில் எங்களுடைய பேட்டிங் நன்றாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். இறுதி நேரத்தில் களத்திற்கு வந்து சிக்ஸர்களை விளாச வேண்டும் இதுதான் நாங்கள் ரியான் பராக்கிற்கு வகுத்துள்ள திட்டம். ஆனால் அவர் துரதிஷ்டவசமாக தற்போது நல்ல பார்மில் இல்லை. ரியான் பராக் வலைப்பயிற்சியில் சிறப்பாகவே பேட்டிங் செய்கிறார். ஆனால் அவர் போட்டியின் போது தடுமாறுகிறார்.

இதையும் படிங்க : IPL 2023 : இன்னுமா அவங்கள நம்புறீங்க, அஷ்வினை நம்பாத சஞ்சுவின் சுமார் கேப்டன்ஷிப் – 2 சொதப்பல் வீரர்களை கலாய்க்கும் ரசிகர்கள்

இந்த சிக்கலை அடையாளம் கண்டு விரைவில் அதற்கு தீர்வு காண முயற்சிப்போம். அவர் தற்போது நல்ல பார்மில் இல்லை என்றாலும் இளம் வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் அதுதான் அவருக்காக நாங்கள் வகுத்துள்ள திட்டம் என சங்கக்காரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement