IPL 2023 : இன்னுமா அவங்கள நம்புறீங்க, அஷ்வினை நம்பாத சஞ்சுவின் சுமார் கேப்டன்ஷிப் – 2 சொதப்பல் வீரர்களை கலாய்க்கும் ரசிகர்கள்

Riyan Parag Devdutt Padikkal RR
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ தங்களது 4வது வெற்றியை பதிவு செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தைக் கொண்டிருந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் கடுமையாக போராடி 154/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கெய்ல் மேயர்ஸ் 51 (41) ரன்களும் கேப்டன் கேஎல் ராகுல் 39 (32) ரன்களும் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் அஸ்வின் 4 ஓவரில் வெறும் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

அதை தொடர்ந்து 155 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினாலும் பட்லருடன் 87 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஜெய்ஸ்வால் 44 (35) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அவசரப்பட்டு 2 (4) ரன்களில் ரன் அவுட்டானது பெரிய திருப்பு முனையாக அமைந்தது. போதாக்குறைக்கு அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அரிதாக தடுமாற்றமாக செயல்பட்ட ஜோஸ் பட்லர் 40 (41) ரன்களில் அவுட்டான போது வந்த அதிரடி வீரர் சிம்ரோன் ஹெட்மயரும் 2 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

இன்னுமா நம்புறீங்க:
அதனால் கடைசி 5 ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்ட போது காலம் காலமாக சொதப்பலாகவும் கடந்த சில வருடங்களாகவே தடுமாற்றமாகவும் செயல்பட்டு வரும் ரியன் பராக் – தேவ்தூத் படிக்கல் ஆகியோர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டதால் வெற்றிக்கு போராடினர். ஆனால் பொதுவாகவே அதிரடியாக விளையாடத் தடுமாறக்கூடிய அவர்கள் 19.3 ஓவர்கள் வரை எவ்வளவோ முயற்சித்தும் தேவையான ரன்களை அதிரடியாக எடுக்க முடியவில்லை.

குறிப்பாக கடைசி ஓவரில் படிக்கல் 26 (21) ரன்களில் அவுட்டாகி கைவிட்டதால் வெறும் 3 பந்துகளில் 13 ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இளம் வீரர் துருவ் ஜுரேல் டக் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்து வந்த அஷ்வின் 2, 1 என 3* (2) ரன்களை மட்டும் எடுத்தார். மறுபுறம் வாயில் மட்டும் பேசக்கூடிய ரியன் பராக் 16வது ஓவரில் களமிறங்கி நன்கு செட்டிலாகியும் இறுதியில் 15* (12) ரன்களை 125.00 ஸ்ட்ரைக் ரேட்டில் மேட்டுமே எடுத்து மீண்டும் வெற்றிக்கு உதவாத வகையிலேயே செயல்பட்டார்.

- Advertisement -

இதில் ரசிகர்களை கடுப்பேற்றும் விஷயம் என்னவெனில் அடுத்ததாக பேட்டிங் செய்வதற்கு ஜேசன் ஹோல்டர் பெஞ்சில் காத்திருந்த நிலையில் ஓவர்கள் முடிந்து போனதால் ராஜஸ்தானுக்கு தோல்வி கிடைத்தது. இந்த இடத்தில் தான் சந்து சாம்சன் கேப்டன்ஷிப் மீது நிறைய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் கடந்த போட்டியில் குஜராத்துக்கு எதிராக பெரிய ரன்களை துரத்தும் போது முக்கிய நேரத்தில் அஸ்வின் 10 (3) ரன்களும் ஜுரேல் 18 (10) ரன்களும் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டனர்.

அப்படி அதிரடியாக விளையாடும் திறமையுடன் இந்த சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கும் அஸ்வின், துருவ் ஜுரேல், ஜேசன் ஹோல்டர் ஆகிய 3 வீரர்களை இப்போட்டியில் முன்கூட்டியே களமிறக்கியிருந்தால் நிச்சயமாக மூவரில் யாராவது ஒருவர் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்து வெற்றி பெற வைத்திருப்பார்கள். அதை விட்டு விட்டு 125க்கும் குறைவான கேரியர் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருப்பதுடன் இந்த சீசனில் தடுமாறி வரும் படிக்கல் – ரியன் பராக் ஆகியோரை முன்கூட்டியே களமிறக்கியதற்காகவே இந்த தோல்வி கிடைத்ததாக சஞ்சு சாம்சன் சாம்சன் மற்றும் சங்ககாரா ஆகியோரை ரசிகர்கள் விளாசுகிறார்கள்.

இதையும் படிங்க:LSG vs RR : இந்த பிட்ச்ல இப்படி ஒரு கஷ்டம் இருக்கும்னு எனக்கு தெரியும் – ஆட்டநாயகன் ஸ்டோய்னிஸ் பேட்டி

அத்துடன் சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு வரும் ரியான் பராக் – தேவ்தூத் படிக்கல் ஆகியோருக்கு நேற்று பட்லர், சாம்சன், ஜெய்ஸ்வால், ஹெட்மயர் ஆகியோர் தடுமாறிய வேளையில் சிறப்பாக செயல்படுவதற்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிலும் சொதப்பிய அவர்களை வைத்துக் கொண்டு நிச்சயமாக உங்களால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது என்ற ராஜஸ்தானை விளாசும் இந்த சீசனுடன் கழற்றி விடுமாறும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement