LSG vs RR : இந்த பிட்ச்ல இப்படி ஒரு கஷ்டம் இருக்கும்னு எனக்கு தெரியும் – ஆட்டநாயகன் ஸ்டோய்னிஸ் பேட்டி

Stoinis 3
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியானது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்த மைதானத்தில் லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவருமே ரன் குவிக்க தடுமாறினர்.

LSG vs RR

- Advertisement -

ஏனெனில் மைதானம் அந்த அளவிற்கு பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. அதேபோன்று பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியும் சிறப்பான துவக்கத்தை பெற்று இருந்தாலும் இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியை சந்தித்தது.

ராஜஸ்தான் அணியிலும் துவக்க வீரர்கள் பட்லர் மற்றும் ஜெய்ஷ்வால் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி இருந்தாலும் அவர்களாலும் அதிரடியாக விளையாட முடியவில்லை. அதேபோன்று பின் வரிசையில் விளையாடும் பேட்ஸ்மேன்களாலும் போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு இந்த ஜெய்ப்பூர் மைதானமானது பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது.

Stoinis 2

இந்த போட்டியில் பேட்டிங்கில் 21 ரன்களை அடித்த ஸ்டோய்னிஸ் பந்துவீச்சின் போது நான்கு ஓவர்களை முழுவதுமாக வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஸ்டோய்னிஸ் கூறுகையில் : இந்த போட்டியில் பந்துவீச்சில் எனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. ஜாஸ் பட்லருக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் வைத்திருக்கவில்லை. மைதானம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்ததால் ஷார்ட் பிட்ச் பந்தை வீச அவரின் விக்கெட்டும் கிடைத்தது.

இதையும் படிங்க : RR vs LSG : எங்க டீம் இவ்ளோ ஸ்ட்ராங்கா இருந்தும் இப்படி நடந்தது மனசுக்கு கஷ்டமா இருக்கு – சஞ்சு சாம்சன் வருத்தம்

இந்த மைதானத்தில் 20 பந்துகளில் 50 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தால் நிச்சயம் அடிக்க முடியாது என்று நினைத்தேன். ஏனெனில் அந்த வகையில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்ததை நான் புரிந்து கொண்டேன். இந்த ஆடுகளத்தில் சேசிங்கின் போது இப்படி ஒரு சிக்கல் இருக்கும் என்பதை உணர்ந்தேன். எனவே நிச்சயம் இந்த போட்டியில் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் இருந்ததாக ஸ்டோய்னிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement