RR vs LSG : எங்க டீம் இவ்ளோ ஸ்ட்ராங்கா இருந்தும் இப்படி நடந்தது மனசுக்கு கஷ்டமா இருக்கு – சஞ்சு சாம்சன் வருத்தம்

Sanju-Samson
- Advertisement -

ஜெய்ப்பூர் நகரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அவர்களது சொந்த மைதானத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

LSG vs RR

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்தது.

பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே குவித்ததால் 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : இந்த போட்டியில் தோல்வி அடைந்தது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. ஏனெனில் சொந்த மைதானத்தில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம்.

Stoinis

ஆனால் இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்தது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுபோன்ற தோல்விகளில் இருந்து பல்வேறு விடயங்களை கற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு இருக்கும் பேட்டிங் வரிசைக்கும், பேட்டிங் பலத்திற்கும் நிச்சயம் இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசிவிட்டனர்.

- Advertisement -

அதோடு இந்த மைதானத்தின் தன்மையையும் கணித்து அவர்கள் சிறப்பாக பந்து வீசியதால் நாங்கள் எதிர்பாராத முடிவு இங்கு கிடைத்திருக்கிறது. இந்த மைதானத்தில் பந்து மிகவும் தாழ்வாக வந்ததால் சரியான கிரிக்கெட் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். போட்டியின் ஒன்பதாவது ஓவர் வரை நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம். அதன் பிறகு ஜெய்ஷ்வால் ஆட்டம் இழந்ததும் பெரிய பார்ட்னர்ஷிப் அமையாமல் போனது.

இதையும் படிங்க : LSG vs RR : நாங்க நெனச்சது வேற, ஆனா இங்க நடந்தது வேற. நல்லவேளை பவுலர்ஸ் காப்பாத்திட்டாங்க – ராகுல் மகிழ்ச்சி

கடைசி ஐந்து ஓவர்களில் 50 ரன்கள் தேவை என்கிற நிலைமையில் இந்த மைதானத்தில் அந்த ரன்களை அடிப்பது கடினமாகவே இருந்தது. இது போன்ற போட்டிகளில் இருந்து தான் நமக்கு சிறப்பான பாடங்கள் கிடைக்கின்றன. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்களை 160 ரன்களுக்குள் நிறுத்தி இருந்தாலும் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவு எங்களுடைய ஆட்டம் திருப்தி அளிக்கவில்லை என்று தோல்வி குறித்து சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement