LSG vs RR : நாங்க நெனச்சது வேற, ஆனா இங்க நடந்தது வேற. நல்லவேளை பவுலர்ஸ் காப்பாத்திட்டாங்க – ராகுல் மகிழ்ச்சி

KL Rahul LSG
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-ஆவது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்தது. லக்னோ அணி சார்பாக கையில் மேயர்ஸ் அதிகபட்சமாக 51 ரன்களை குவித்தார்.

LSG vs RR

- Advertisement -

அதனை தொடர்ந்து 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே குவித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது அணி பெற்ற சிறப்பான வெற்றி குறித்து பேசிய கே.எல் ராகுல் கூறுகையில் : முதல் 10 ஓவர் முடிந்த பிறகு நானும் கையில் மேயர்ஸ்-சும் 160 ரன்கள் வரை அடித்தால் இந்த மைதானத்தில் நல்ல ஸ்கோராக இருக்கும் என்று தெரிந்து கொண்டோம்.

LSG

இருந்தாலும் இறுதியில் நாங்கள் 10 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம் என்று நினைத்தோம். இருப்பினும் பேட்டிங்கில் நாங்கள் செய்த குறையை பந்துவீச்சில் பவுலர்கள் சரி செய்தார்கள் என்று கூறுவேன். ஏனெனில் இந்த மைதானத்தில் எப்படி ஒரு குறைந்த இலக்கை நிறுத்த பந்துவீச்சாளர்களே காரணம். மைதானத்தில் டியூ இல்லாததால் இரண்டு அணிகளுக்குமே பந்துவீச்சில் நல்ல சாதகம் இருந்தது.

- Advertisement -

நேற்று நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி செய்யும்போது 180 ரன்கள் வரை இந்த மைதானத்தில் அடித்தால் வெற்றிக்கு சரியான இலக்காக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இன்று பந்து நாங்கள் நினைத்ததை விட லோவாகவும், ஸ்லோவாகவும் இருந்தது. அதன் காரணமாக பவர்பிளே முடிந்த பிறகு நாங்கள் இது 180 ரன்கள் அடிக்கக்கூடிய மைதானம் அல்ல 170 ரன்கள் வரை அடித்தாலே போதும் என்று நினைத்தோம்.

இதையும் படிங்க : IPL 2023 : சென்னை – லக்னோ மோதும் போட்டியில் திடீர் மாற்றம், ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட புதிய தேதி – காரணம் இதோ

இருப்பினும் இறுதியில் நாங்கள் 10 ரன்கள் வரை குறைவாகவே அடித்து விட்டோம். இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி இறுதி வரை ஆட்டத்தைக் கொண்டு சென்று வெற்றியும் பெற்று தந்துள்ளனர். இந்த வெற்றிக்கு முழுவதும் பந்துவீச்சாளர்களே காரணம் என கே.எல் ராகுல் மகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement