IPL 2023 : சென்னை – லக்னோ மோதும் போட்டியில் திடீர் மாற்றம், ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட புதிய தேதி – காரணம் இதோ

LSG vs CSK
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருந்து வருகிறது. அந்த அணிக்கு தீபக் சஹர், பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் விளையாடாமல் இருப்பது பந்து வீச்சு துறையில் பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. இருப்பினும் துசார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் போன்ற இளம் வீரர்கள் முடிந்தளவுக்கு வேகப்பந்து வீச்சுத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் சுழல் பந்து வீச்சு துறையில் ரவீந்திர ஜடேஜா, மொய்ன் அலி ஆகியோர் அசத்தி வருகிறார்கள்.

GT vs CSK MS Dhoni

- Advertisement -

அதே போல பேட்டிங் துறையில் யாருமே எதிர்பாராத வகையில் பொறுமையாக விளையாடக்கூடிய அஜிங்க்ய ரகானே கேப்டன் தோனி தலைமையில் அந்நியனாக விளையாடும் நிலையில் சிவம் துபேவும் முக்கிய ரன்களை எடுத்து வருகிறார். மேலும் டேவோன் கான்வே, ருதுராஜ் ஆகியோரும் அதிரடியாக செயல்பட்டு வரும் நிலையில் கேப்டன் தோனியும் 41 வயதில் ஓரிரு பந்துகளை விளையாடினாலும் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் வகையில் அசத்தி வருகிறார். அதனால் கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து பின்னடைவை சந்தித்த சென்னை இம்முறை 5வது கோப்பையை வென்று கம்பேக் கொடுக்கும் என அந்த அணி ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

போட்டியில் மாற்றம்:
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 21ஆம் தேதி தன்னுடைய 6வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சொந்த ஊரான சேப்பாக்கத்தில் சென்னை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்த சீசனில் சென்னை பங்கேற்கும் 2 பகல் போட்டிகளின் முதல் போட்டி வரும் ஏப்ரல் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து சென்னையின் 2வது பகல் போட்டி வரும் மே 4ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு லக்னோவில் இருக்கும் அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

CSK vs LSG

இருப்பினும் அன்றைய நாளில் லக்னோ நகரில் முக்கியமான உள்ளூர் மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதால் அந்த போட்டி ஒருநாள் முன்பாக நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக தேர்தல் காரணமாக அந்த போட்டிக்கு உள்ளூர் காவல்துறை கொடுக்க வேண்டிய பாதுகாப்பில் எந்த குறைபாடும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி லக்னோவுக்கு எதிராக சென்னை களமிறங்கும் போட்டி மே 4ஆம் தேதிக்கு பதிலாக மே 3ஆம் தேதி புதன்கிழமை மதியம் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.

- Advertisement -

இது பற்றி ஐபிஎல் நிர்வாக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் 2023 போட்டி 46 லீக் போட்டி ஏற்கனவே திட்டமிட்டபடி மே 4ஆம் தேதி லக்னோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது அது மே 3ஆம் தேதி புதன்கிழமை மாற்றப்பட்டுள்ளது. மே 4ஆம் தேதி லக்னோ முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் நடைபெறுவதால் இந்த போட்டி மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் போட்டி துவவங்கும் 3.30 மணி நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

CSK vs LSG

இதனால் லக்னோவில் முதல் முறையாக சென்னை விளையாடும் போட்டி ஒருநாள் முன்பாகவே நடைபெற உள்ளது அங்குள்ள சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இந்த சீசனில் ஏற்கனவே சேப்பாக்கத்தில் முதல் முறையாக லக்னோவை எதிர்கொண்ட போது அதிரடியாக விளையாடிய சென்னை கடைசி ஓவரில் தோனி அடித்த 2 அடுத்தடுத்த சிக்ஸர்கள் உதவியுடன் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க:IPL 2023 : அந்த விஷயத்துல என்னால் ராஜஸ்தான் அணிக்கு எந்த பயனுமில்ல, பெஞ்சில் இருப்பது ஹேப்பி தான் – சஹால் ஓப்பன்டாக்

அதே போல இந்த போட்டியிலும் லக்னோவை அதன் சொந்த ஊரில் சென்னை தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement