GT vs CSK : சுப்மன் கில் இல்ல, சிஎஸ்கே’வை வீழ்த்த போகும் துருப்பு சீட்டு அவர் தான் – குஜராத் வீரரை பாராட்டிய சேவாக்

Sehwag
- Advertisement -

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து மே 28ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெறும் குவாலிபயர் 1 பிளே ஆப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத்தை 2வது இடம் பிடித்த முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.

CSK vs GT

- Advertisement -

கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்டு முதல் வருடத்திலேயே எதிரணிகளை சொல்லி அடித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் இந்த வருடமும் அதே போல ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பையை தக்க வைக்க போராடி வருகிறது. மேலும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னையை ஏற்கனவே கடந்த வருடம் சந்தித்த 2 போட்டிகளிலும் தோற்கடித்த குஜராத் இந்த வருடம் சந்தித்த அறிமுக போட்டியிலும் தோற்கடித்திருந்தது.

துருப்பு சீட்டு:
அந்த வகையில் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் சென்னையை வென்றுள்ள அந்த அணி இம்முறை அதன் கோட்டையான சேப்பாக்கத்தில் வீழ்த்தி நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது. மறுபுறம் 4 கோப்பைகளை வென்று 14 சீசன்களில் 12 முறை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அந்த காலம் முதல் இந்த காலம் வரை வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தோனி தலைமையிலான சென்னை தனது சொந்த ஊரான சேப்பாக்கத்தில் தமிழக ரசிகர்களின் ஆதரவுடன் குஜராத்தை தோற்கடித்து இதற்கு முன் பரிசளித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்த ஃபைனலுக்கு தகுதி பெற போராட உள்ளது.

Rashid Khan

அதற்கு கடந்த 2 லீக் போட்டிகளில் அடுத்தடுத்த சதமடித்து பெங்களூருவை வீட்டுக்கு அனுப்பி வைத்து உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் சென்னைக்கு பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் இந்த சீசனில் இதர குஜராத் வீரர்களை காட்டிலும் 680 ரன்கள் குவித்துள்ள அவர் சேப்பாக்கம் மைதானத்திலும் சிறப்பாக செயல்பட்டு சென்னையை தோற்கடித்து ஃபைனலுக்கு செல்வோம் என்று ஏற்கனவே தெரிவித்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவரை விட இயற்கையாகவே சுழலுக்கு சாதகமான தன்மையை கொண்ட சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையை தோற்கடிக்கும் அளவுக்கு ரசித் கான் குஜராத்தின் துருப்பச் சீட்டு வீரராக செயல்படுவார் என்று முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் எச்சரித்துள்ளார். இந்த குவாலிபயர் 1 போட்டியின் வெற்றியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவர் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் எழுப்பிப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு.

“ரசித் கான் தான் குஜராத் அணியின் துருப்புச்சீட்டு வீரர் ஆவார். குறிப்பாக போட்டியின் எந்த சமயத்திலும் விக்கெட் தேவைப்பட்டால் குஜராத் அவரை பந்து வீச கொண்டு வரலாம். அந்த வகையில் இந்த சீசன் முழுவதும் ஹர்திக் பாண்டியா அவரை பயன்படுத்திய விதம் அபாரமாக இருந்து வருகிறது. பொதுவாக எதிரணி போடும் பார்ட்னர்ஷிப்களை உடைக்கும் திறமை கொண்ட ரசித் கான் இந்த சீசனில் வெற்றிகரமான பவுலராக இருக்கிறார். எனவே இந்த சீசன் முழுவதும் அசத்திய அவர் இந்த போட்டியிலும் குஜராத்துக்காக சிறப்பாக செயல்படுவார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: தோல்வியடைந்த கையோடு அவசர அவசரமாக இங்கிலாந்து புறப்பட்ட விராட் கோலி மற்றும் சிராஜ் – காரணம் என்ன தெரியுமா?

அவர் கூறுவது போல உலகின் அனைத்து நாடுகளிலும் நடைபெறும் பல்வேறு டி20 தொடர்களில் விளையாடி 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து இப்போதே ஜாம்பவனாக செயல்பட்டு வரும் ரசித் கான் இந்த சீசனில் 24 விக்கெட்டுகளுக்கு அதிக விக்கெட் எடுத்த பவுலருக்கு வழங்கப்படும் ஊதா தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். எனவே இந்த போட்டியில் சொந்த மண்ணில் வெற்றி பெறுவதற்கு அவரை சென்னை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

Advertisement