தோல்வியடைந்த கையோடு அவசர அவசரமாக இங்கிலாந்து புறப்பட்ட விராட் கோலி மற்றும் சிராஜ் – காரணம் என்ன தெரியுமா?

Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தன. இந்த லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தினால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்கிற கட்டாயத்துடன் களமிறங்கிய பெங்களூரு அணி விராட் கோலியின் அற்புதமான சதம் காரணமாக 197 ரன்களை குவித்தது.

Siraj

- Advertisement -

பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது சுப்மன் கில்லின் அபாரமான சதம் காரணமாக பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் ப்ளே ஆப் சுற்றின் வாய்ப்பை இழந்து பெங்களூரு அணி சோகத்துடன் வெளியேறியது.

அதிலும் குறிப்பாக முகமது சிராஜ் இந்த போட்டி முடிந்து மைதானத்திலேயே கண்ணீர் விட்டார். விராட் கோலி மிகவும் சோகமாக காணப்பட்டார். அது தவிர்த்து பெங்களூரு அணி எப்படியாவது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்த்த அந்த அணியின் ரசிகர்களும் மைதானத்தில் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றிற்கு முன்னேற முடியாத சோகம் அடங்குவதற்குள் விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இன்று காலை இங்கிலாந்து புறப்பட்டனர். இதற்கு காரணம் யாதெனில் :

Siraj-1

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் முதல் வார இறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியானது நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இன்று அதிகாலை 4:30 மணிக்கு இந்தியாவில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டனர்.

- Advertisement -

கடந்த முறை தவறவிட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதற்காகவே கோலி மற்றும் சிராஜ் ஆகியோர் முன்கூட்டியே அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட இருக்கின்றனர்.

இதையும் படிங்க : IPL 2023 : இன்னுமா வன்மத்தை வெச்சிருக்கீங்க? விராட் கோலி மீதான பகையை மறக்காத கங்குலி – ரசிகர்கள் அதிருப்தி, நடந்தது என்ன

அதோடு ஏற்கனவே இங்கிலாந்தில் புஜாரா கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருவதால் தற்போது இவர்களும் இங்கிலாந்து பயணித்துள்ளனர். இந்த ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement