IPL 2023 : இன்னுமா வன்மத்தை வெச்சிருக்கீங்க? விராட் கோலி மீதான பகையை மறக்காத கங்குலி – ரசிகர்கள் அதிருப்தி, நடந்தது என்ன

Sourav Ganguly
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று முடிந்து பிளே ஆப் சுற்று இன்று துவங்குகிறது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் ஃபைனலுக்கு செல்வதற்காக பிளே ஆஃப் சுற்றில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இருப்பினும் இத்தொடரில் லட்சிய முதல் கோப்பை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வழக்கம் போல லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தது.

குறிப்பாக குஜராத்துக்கு எதிராக நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய கடைசி போட்டியில் தோற்ற அந்த அணி வரலாற்றில் 16வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு சாவலான பிட்ச்சில் இதர வீரர்கள் கைகொடுக்க தவறிய போது தனி ஒருவனாக போராடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 101* (61) ரன்கள் விளாசி காப்பாற்றினார்.

- Advertisement -

இன்னுமா மறக்கல:
இருப்பினும் 198 ரன்களை துரத்திய குஜராத்துக்கு எதிராக வழக்கம் போல சுமாராக பந்து வீசிய பெங்களூரு பவுலர்களை அடித்து நொறுக்கிய சுப்மன் கில் 5 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்து 104* (52) ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார். இருப்பினும் யார் வென்றார்கள் தோற்றார்கள் என்பதை விட அந்த ஒரே போட்டியில் இந்தியாவின் தற்போதைய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலியும் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக போற்றப்படும் சுப்மன் கில்லும் விரைவில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக சதமடித்து நல்ல பார்மில் இருப்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

அதனால் அனைத்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அந்த இருவரையும் பாராட்டிய நிலையில் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மட்டும் சுப்மன் கில் மற்றும் அதே நாளில் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல ஹைதராபாத்துக்கு எதிராக சதமடித்து முக்கிய பங்காற்றிய கேமரூன் கிரீன் ஆகிய இருவரை மட்டும் தனது ட்விட்டரில் பாராட்டினார். மாறாக பெயருக்காக ஒரு வார்த்தை கூட விராட் கோலி பற்றி அவர் குறிப்பிடாதது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

முன்னதாக உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களால் டி20 கேப்டன்ஷிப்பை மட்டும் ராஜினாமா செய்த விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வதாக அறிவித்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக 2021 டி20 உலக கோப்பையில் முதல் முறையாக தோற்றதால் அதிருப்தியடைந்த கங்குலி தலைமையிலான பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்று விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது.

அதனால் மனமுடைந்த விராட் கோலி வெற்றிகரமாக இருந்த போதிலும் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியையும் ராஜினாமா செய்தார். அப்போதிலிருந்தே விராட் கோலியின் பதவி பறிபோவதற்கு கங்குலி தான் முக்கிய காரணம் என்று அவரது ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் ரோகித் சர்மாவுக்கு கங்குலி ஆதரவாக இல்லை மாறாக விராட் கோலியை பிடிக்காதவராக இருந்தார் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் அப்போதைய தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா உண்மையை உளறினார்.

- Advertisement -

அந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் டெல்லியின் இயக்குனராக பெவிலியனில் அமர்ந்திருந்த கங்குலியை விராட் கோலி முறைத்தார். இறுதியில் அந்த இருவரும் போட்டியின் முடிவில் கை கொடுத்துக் கொள்ளாமல் முகத்தை பார்க்காமல் சென்றது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. இருப்பினும் மீண்டும் டெல்லி – பெங்களூரு மோதிய போது அந்த இருவருமே கை கொடுத்துக் கொண்டதால் பிரச்சனை முடிந்ததாக அனைவரும் நினைத்தனர்.

இதையும் படிங்க:CSK vs GT : இந்த 4 பேரை சமாளிச்சிட்டா சி.எஸ்.கே அணி பைனலுக்கு போறது கன்பார்ம் – விவரம் இதோ

ஆனால் தற்போது ஒரே போட்டியில் சதமடித்தும் சுப்மன் கில்லை பாராட்டிய அவர் விராட் கோலி பற்றி எதுவுமே சொல்லாமல் புறக்கணித்துள்ளது இன்னும் அந்த பகைமையையும் வன்மத்தையும் மறக்கவில்லை என்பதை காட்டுவதாக தெரிவிக்கும் ரசிகர்கள் அன்றைய நாளில் சதமடித்த 3 பேரையும் வாழ்த்திய சச்சினை பார்த்து கற்றுக் கொள்ளுமாறு பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement