CSK vs GT : இந்த 4 பேரை சமாளிச்சிட்டா சி.எஸ்.கே அணி பைனலுக்கு போறது கன்பார்ம் – விவரம் இதோ

GT vs CSK MS Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி கட்டப் போட்டிகள் இன்று முதல் நடைபெற இருக்கின்றன. ஏற்கனவே நடைபெற்று முடிந்த லீக் போட்டிகளின் அடிப்படையில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியாக இன்று முதலாவது குவாலிஃபயர் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

CSK vs GT

- Advertisement -

இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதேவேளையில் இந்த போட்டியில் தோல்வியை சந்திக்கும் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோத இருக்கிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று குஜராத் அணியை வீழ்த்த வேண்டுமெனில் குறிப்பிட்ட சில சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதன்படி குஜராத் அணியில் 4 முக்கிய வீரர்களை சென்னை அணி சமாளித்து விட்டால் இறுதிப் போட்டிக்கு செல்வது உறுதி என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சென்னை அணிக்கு போட்டி அளிக்கப்போகும் அந்த நான்கு வீரர்களை குறித்து இங்கு பார்க்கலாம்.

CSK vs GT shami uthappa

1) முகமது ஷமி : குஜராத் அணியின் முதுகெலும்பாக பார்க்கப்படும் முகமது ஷமி இந்த ஆண்டு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டை கைப்பற்றிய பவுலராக இருக்கிறார். துவக்க ஓவர்களில் முகமது ஷமியை சமாளித்து விட்டால் நிச்சயம் சென்னை அணியின் ஸ்கோர் உயரும்.

- Advertisement -

2) ரஷீத் கான் மற்றும் 3) நூர் முகமது : குஜராத் அணியில் இருக்கும் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்களான இவர்களை எதிர்கொள்ளவதில் அனைத்து அணிகளின் பேட்ஸ்மன்களுக்குமே சற்று சிக்கலை ஏற்படுத்தியது. ஆனால் சென்னை மைதானத்தில் சென்னை அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பது என்பதனாலும் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளித்து ஆடும் பேட்ஸ்மேன்கள் சென்னை அணியில் இருப்பதாலும் அவர்கள் இருவரது ஓவர்களையும் எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் அவர்களையும் சமாளித்து விடலாம்.

இதையும் படிங்க : IPL 2023 : மும்பை அணி கொடுத்த காசுக்கு வொர்த்தான பிளேயர் அவர்தான் – இர்பான் பதான் பாராட்டு

4) சுப்மன் கில் : இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் இரண்டு சதங்களுடன் 682 ரன்கள் குவித்துள்ளார். அவரது சிறப்பான துவக்கமே குஜராத் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகவும் இருந்து வருகிறது. எனவே அவரை இந்த போட்டியில் துவக்கத்திலேயே வீழ்த்தி விட்டால் நிச்சயம் குஜராத் அணியை தடுத்து நிறுத்தி வெற்றி பெற முடியும். இந்த நான்கு வீரர்களையும் சென்னை அணி சிறப்பாக எதிர் கொண்டால் கட்டாயம் வெற்றி உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement