இனிமேல் அந்த அணிக்காக விளையாட எனக்கு விருப்பமில்லை. அதிரடி முடிவினை எடுத்த – ரஷீத் கான்

Rashid
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதன் பின்னர் தற்போது அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே எழுந்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் சேர்த்து 10 அணிகள் இந்த தொடரில் விளையாட இருக்கின்றன. இதற்கான அணிகளின் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. லக்னோ மற்றும் அஹமதாபாத் தலைமையிலான புதிய அணிகள் அடுத்த தொடரில் விளையாட இருக்கின்றன.

SRH

இந்த தொடருக்காக அனைத்து அணிகளின் வீரர்களும் கலைக்கப்பட்டு தற்போது மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் ரீடெயின் செய்ய உள்ள நான்கு வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சன்ரைசர்ஸ் அணி தங்களது முதல் நபராக கேப்டன் கேன் வில்லியம்சனை தக்கவைக்க வைக்கும் என்பது உறுதி.

- Advertisement -

அதே போன்று டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பவுலராக திகழும் ரஷீத் கானையும் சன்ரைசர்ஸ் அணி தக்க வைக்க நினைக்கிறது. ஆனால் ரஷித் கான் சன்ரைசர்ஸ் அணியில் இருந்து வெளியேறி மெகா ஆக்சனில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரஷீத் கான் இதுவரை 76 போட்டிகளில் விளையாடி 93 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஓவருக்கு 6.33 ரன்களை மட்டுமே வழங்கி சிறப்பான பந்துவீச்சை இதுவரை வெளிப்படுத்தியுள்ளார்.

Rashid

இந்நிலையில் ரஷீத் கான் சன் ரைசர்ஸ் அணியில் இருந்து வெளியேறி மெகா ஏலத்திற்கு செல்ல இருப்பதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் ஏலத்தில் கலந்து கொள்ளும் போது புதிய அணிக்காக தேர்ந்தெடுக்கப்படுவது மட்டுமின்றி பெரிய தொகைக்கு அவர் செல்வார் என்று நினைப்பதனால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அவரது இந்த விலகல் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இந்திய அணியில் மட்டுமல்ல. தமிழ்நாடு அணியிலிருந்து நடராஜன் நீக்கம் – காரணம் இதுதானாம்

ஏனெனில் ரஷீத் கான் போன்ற ஒரு பவுலர் எந்த அணியில் இருந்தாலும் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு மற்றவர்களை விட சற்று கூடுதல் என்றே கூறலாம். ரஷித் கான் ஏலத்திற்கு செல்லும் பட்சத்தில் நிச்சயம் அவருக்காக அனைத்து அணிகளும் கடுமையான போட்டியை அளிக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement