இந்திய அணியில் மட்டுமல்ல. தமிழ்நாடு அணியிலிருந்து நடராஜன் நீக்கம் – காரணம் இதுதானாம்

Nattu
- Advertisement -

தமிழக அணியைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் 13-வது ஐபிஎல் தொடரின்போது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் காரணமாக ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் அவருக்கு நெட் பவுலராக இடம் கிடைத்தது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமான நடராஜன் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்ததால் அவர் தொடர்ந்து இந்திய அணியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்ற அவர் அதன் பின்னர் காயம் காரணமாக தொடர்ந்து இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

nattu

- Advertisement -

தற்போது மீண்டும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள நடராஜன் நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன் இந்த சையது முஷ்டாக் அலி தொடரில் அதிக ரன்களை வழங்கியது மட்டுமின்றி விக்கெட் வீழ்த்தவும் சற்று தடுமாறினார். இதன் காரணமாக அந்த தொடரின் இறுதிப் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.

இதனை தொடர்ந்து தற்போது அடுத்து நடைபெறவுள்ள விஜய் ஹசாரே தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தினேஷ் கார்த்திக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். அதேவேளையில் நடராஜன் தமிழக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது இந்த நீக்கம் தற்போது ரசிகர்களிடையே பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஏன் அவரை அணியில் இருந்து நீக்கினார்கள் ? என்பது குறித்த கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

tn

இந்நிலையில் இதற்கான உண்மை காரணம் யாதெனில் : 14வது ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயத்தினால் அந்த தொடரை தவறவிட்ட நடராஜன் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு காயம் குணமடைந்து தற்போது சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடினாலும் அவரது செயல்பாடு முன்புபோல் திருப்தியாக இல்லை. எனவே அவருக்கு இன்னும் உயர்தர பயிற்சி தேவை என்கிற காரணத்தினால் விஜய் ஹசாரே தொடரில் அவருக்கு இடம் கொடுக்காமல் அவரை அணியில் இருந்து தமிழக கிரிக்கெட் நிர்வாகம் வெளியேற்றியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவாரா? ஒளிவு மறைவின்றி பதிலை கூறிய – வி.வி.எஸ்.லட்சுமணன்

மேலும் இந்த ஓய்வு நேரத்தில் அவர் மேலும் பயிற்சி செய்து மீண்டும் பலமாக திரும்ப வேண்டும் என்பதன் காரணமாகவே அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

Advertisement