இரண்டாவது டெஸ்ட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவாரா? ஒளிவு மறைவின்றி பதிலை கூறிய – வி.வி.எஸ்.லட்சுமணன்

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 345 ரன்களை குவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மூன்றாம் நாளில் நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் அறிமுக வாய்ப்பைப் பெற்ற இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார்.

iyer 1

- Advertisement -

மேலும் இந்திய அணிக்காக அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 16-ஆவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்நிலையில் அடுத்த போட்டியில் கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்புவதால் ஸ்ரேயாஸ் அய்யர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா ? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன் கூறுகையில் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட்கோலி அணிக்கு திரும்பும் பட்சத்தில் நிச்சயம் ஷ்ரேயாஸ் ஐயர் தனது இடத்தை இழப்பார் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

Iyer-2

ஏனெனில் ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 2016 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது ரஹானேவிற்கு பதிலாக களமிறங்கிய கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தி இருந்தார். ஆனால் அடுத்த போட்டியில் ரஹானே விளையாட வந்துவிட்டதால் கருண் நாயர் வேறு வழியின்றி வெளியேற்றப்பட்டார். அதேபோன்று இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கோலி வருவதன் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் தனது இடத்தை விட்டு கொடுத்தாக வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா கிடையாது. என்னை பொறுத்தவரை இவங்க 2 பேர்தான் ஆல்ரவுண்டர் – கபில் தேவ் ஓபன்டாக்

என்னைப்பொறுத்தவரை அவர் அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை. இந்திய அணியில் இது எழுதப்படாத ஒரு விதியாக இருந்து வருகிறது. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஹானே மோசமான பார்மில் இருப்பதால் அவரது இடத்திற்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement