
ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான நடப்பு டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் முக்கிய போட்டியானது இன்று கிங்ஸ்டன் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் மைதானத்தின் தன்மையை கணக்கில் கொண்டு தங்களது அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக குர்பாஸ் 43 ரன்களையும், ரஷீத் கான் 19 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணியானது முதல் முறையாக ஐ.சி.சி தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறி அசதியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் சக வீரர் மீது கோபத்தை வெளிப்படுத்திய சம்பவம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்த போட்டியின் போது கடைசி கட்டத்தில் ரன்கள் வராத சூழலில் கேப்டன் ரஷீத் கான் அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு பந்தை தூக்கி அடித்தார். அப்போது இரண்டாவது ரன்க்கு வாய்ப்பு இருந்தும் எதிர்புறம் இருந்த கரீம் ஜனத் ஓடி வராமல் அப்படியே நின்றார்.
இதையும் படிங்க : லாராவை தலைகுனிய விடல.. எங்களோட வெற்றி ஜுன் 8இல் ஆரம்பிச்சது.. ஆஸியை வெளியேற்றியது பற்றி ரசித் பேட்டி
இதனால் அதிருப்தி அடைந்த ரஷீத் கான் கோபப்பட்டு அவரை பார்த்து கத்தியவாறு பேட்டை தூக்கி எறிந்தார். இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.