லாராவை தலைகுனிய விடல.. எங்களோட வெற்றி ஜுன் 8இல் ஆரம்பிச்சது.. ஆஸியை வெளியேற்றியது பற்றி ரசித் பேட்டி

Rashid Khan
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் ஆகிய 2 அணிகளையும் நாக் அவுட் செய்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக 25ஆம் தேதி செயின்ட் வின்சென்ட் நகரில் நடைபெற்ற கடைசி சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் வெறும் 115/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ரகமனுல்லாஹ் குர்பாஸ் 43 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ரிஷத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து மழையால் 19 ஓவரில் 114 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை துரத்திய வங்கதேசம் திணறலாக விளையாடி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்து வெளியேறியது.

- Advertisement -

லாராவுக்கு நன்றி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 54* ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான் 4, நவீன் 4 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதனால் முதல் முறையாக ஐசிசி தொடரின் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது. முன்னதாக பல முன்னாள் வீரர்களில் ஜாம்பவான் பிரைன் லாரா மட்டுமே கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று கணித்திருந்தார்.

தற்போது அதை செய்து காட்டியுள்ள ஆப்கானிஸ்தான் பிரைன் லாராவை தலைகுனிய விடவில்லை என்று கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக வென்றது தான் தங்களுக்கு உத்வேகத்தை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “செமி ஃபைனலில் இருப்பது கனவு போல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்த போது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை”

- Advertisement -

“பிரைன் லாரா மட்டுமே நாங்கள் செமி ஃபைனல் வருவோம் என்று சொன்னார். அதை நாங்கள் சரி என்று நிரூபித்துள்ளோம். அவரை பார்க்கும் போது உங்களை தலை குனிய விடவில்லை என்று நாங்கள் சொல்வோம். இந்த பிட்ச்சில் 130 – 135 ரன்கள் நல்ல இலக்கு என்று நினைத்தோம். அதனால் 15 – 20 ரன்கள் குறைவாகவே அடித்தோம். அதை 12 ஓவரில் சேசிங் செய்ய வங்கதேசம் வரும் என்பது எங்களுக்கு தெரியும்”

இதையும் படிங்க: ஆஸ்கார் கொடுக்கலாம் போலயே.. வெற்றிக்காக நடித்த ஆப்கானிஸ்தான் வீரர்.. கலாய்த்த அஸ்வின்.. நடந்தது என்ன?

“அதையே நாங்கள் சாதகமாகவும் எடுத்துக் கொண்டு எங்களுடைய முயற்சியை போட்டோம். அனைவரும் அற்புதமாக விளையாடினர். டி20 கிரிக்கெட்டில் பந்து வீச்சில் எங்களிடம் வலுவான அடிப்படை இருக்கிறது. மழை வந்தாலும் செமி பைனல் செல்ல 10 விக்கெட்டுகள் என்பதை தவிர்த்து வேறு வழியில்லை. குல்பதின் நன்றாக இருப்பார் என்று நம்புகிறேன். அவர் எடுத்து விக்கெட் பெரியது. இந்த வெற்றி எங்கள் நாட்டில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை உண்டாக்கும் தற்போது செமி ஃபைனலில் தெளிவான மனதுடன் எளிமையாக விளையாடுவோம்” என்று கூறினார்.

Advertisement