ரன்ரேட் எதுவா இருந்தாலும்.. இதை செஞ்சா ஃபினிசிங் பண்ணிடலாம்.. ஆட்டநாயகன் ரசித் கான் பேட்டி

Rashid Khan 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் பத்தாம் தேதி நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 3 வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 197 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 68* (38), ரியன் பராக் 76 (48) ரன்கள் எடுத்தனர்.

பின்னர் சேசிங் செய்த குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி போராடினார். இருப்பினும் எதிர்ப்புறம் சாய் சுதர்சன் 35, மேத்யூ வேட் 8, அபினவ் மனோகர் 1, விஜய் சங்கர் 16 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். அதனால் ஒரு கட்டத்தில் சுப்மன் கில்லும் 72 (44) ரன்கள் அடித்து போராடி ஆட்டமிழந்ததால் குஜராத் வெற்றி கேள்விக்குறியானது.

- Advertisement -

ஃபினிஷிங் ரகசியம்:
ஆனால் கடைசி 12 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்ட போது அதிரடியாக விளையாடிய ராகுல் திவாட்டியா 22 (11), ரசித் கான் 24* (11) ரன்கள் குவித்து கடைசி பந்தில் குஜராத்தை திரில் வெற்றி பெற வைத்தனர். அதனால் குல்தீப் சென், 3 சஹால் 2 விக்கெட்டுகள் எடுத்தும் ராஜஸ்தான் முதல் தோல்வியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு ஒரு விக்கெட் மற்றும் 24* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரசித் கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பேட்டிங், பவுலிங்கை விட போட்டியில் வெற்றி பெறுவது மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவிக்கும் ரசித் கான் அறுவை சிகிச்சைகள் பந்து வீச தடுமாறியதாக கூறியுள்ளார். அத்துடன் சேசிங்கில் எவ்வளவு பெரிய ரன் ரேட்டாக இருந்தாலும் நேர்மறையாக சிந்தித்து 3 – 4 சிக்ஸர்களை அடித்து விளையாடினால் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“போட்டியில் வெற்றி பெறுவதே எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இன்று நான் விரும்பிய இடத்தில் பந்தை வீசியதில் மகிழ்ச்சியடைகிறேன். அதுவே பேட்டிங்கில் எனக்கு ஆற்றலை கொடுத்தது. அறுவை சிகிச்சைக்கு பின் நான் கடந்த 3 – 4 மாதங்களில் அதிகமாக பந்து வீசவில்லை. ஆனால் பந்தின் மீதான பிடியை நான் இழந்தேன். இருப்பினும் கடந்த போட்டிக்கு பின் நல்ல பயிற்சியை எடுத்தேன்”

இதையும் படிங்க: 199 ரன்ஸ்.. 12 பந்தில் திவாடியா – ரசித் மேஜிக்.. கடைசி பந்தில் ராஜஸ்தானின் வெற்றியை பறித்தது எப்படி?

“அது எனது சிறந்த நிலைக்கு திரும்ப உதவியது. அதனால் இன்று எனது பந்து வீச்சை மிகவும் ரசித்தேன். அதிக ரன் ரேட்டை சேசிங் செய்யும் போது 3 – 4 சிக்ஸர்கள் அடித்தால் அது தாமாக ரன் ரேட் தாமாக கீழே கொண்டு வந்து விடும். அந்த நேரங்களில் நீங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும். உங்களுக்குள் நேர்மறையாக சிந்தித்தால் முடிவும் சிறப்பாக வரும்” என்று கூறினார்.

Advertisement