199 ரன்ஸ்.. 12 பந்தில் திவாடியா – ரசித் மேஜிக்.. கடைசி பந்தில் ராஜஸ்தானின் வெற்றியை பறித்தது எப்படி?

RR vs GT
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 10ஆம் தேதி ஜெய்ப்பூரில் 24வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு நேரடியாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 24 (19) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் ஜோஸ் பட்லரும் தடுமாறி 8 (10) ரன்களில் நடையை கட்டினார்.

இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோர் ராஜஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கினார். குறிப்பாக 0, 6 ரன்களில் கொடுத்த கேட்ச்சை தவற விட்டதை பயன்படுத்திய ரியன் பராக் குஜராத்தை கலங்கடித்து அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடி ராஜஸ்தானை வலுப்படுத்தியது.

- Advertisement -

திரில் வெற்றி:
அதில் அரை சதமடித்த ரியன் பராக் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 76 (48) ரன்கள் குவித்து அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் கடைசி வரை அவுட்டாகாமல் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 68 (38) ரன்கள் அடித்தார். அவருடன் ஹெட்மயர் 13* (5) ரன்கள் அடித்ததால் 20 ஓவரில் ராஜஸ்தான் 196/4 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் மோஹித் சர்மா, ரசித் கான், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 197 ரன்களை துரத்திய குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில்லுடன் சேர்ந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சாய் சுதர்சனை 35 (29) ரன்களில் காலி செய்த குல்தீப் சென் அடுத்ததாக வந்த மேத்யூ வேடை 4 (6) ரன்களில் போல்டாக்கினார். அதோடு நிறுத்தாத அவர் அடுத்ததாக வந்த அபினவ் மனோகரை 1 ரன்னில் கிளீன் போல்ட்டாக்கினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கில் அரை சதமடித்து போராடினார்.

- Advertisement -

ஆனால் எதிர்ப்புறம் வந்த விஜய் சங்கர் 16 (10) ரன்களில் அவுட்டானதால் வேகமாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அவர் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 72 (44) ரன்கள் எடுத்து சஹால் சுழலில் ஸ்டம்பிங்கானார். அப்போது வந்த தமிழக வீரர் சாருக்கான் அதிரடியாக விளையாட முயற்சித்து 14 (8) ரன்களில் அவுட்டானதால் குஜராத் வெற்றி கேள்விக்குறியானது.

ஆனால் கடைசி 12 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்ட போது ராகுல் திவாட்டியா மற்றும் ரசித் கான் ஆகியோர் சேர்ந்து குல்தீப் சென் வீசிய 19வது ஓவரில் 1 நோபால், 2 ஒய்ட்டையும் சேர்த்து 20 ரன்கள் அடித்தனர். அதனால் ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் வெறும் 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது 4, 2, 4, 1 என முதல் 4 பந்துகளில் ரசித் கான் 11 ரன்கள் விளாசினார்.

இதையும் படிங்க: டி20 உலககோப்பையில் ரிங்கு சிங் இடம்பெற வாய்ப்பில்லை.. காரணம் இதுதான் – வெளியான தகவல்

இருப்பினும் 5வது பந்தில் ராகுல் திவாட்டியா 22 (11) ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மீண்டும் கடைசி பந்தில் பவுண்டரியை அடித்த ரசித் கான் 24* (11) ரன்கள் விளாசி மாஸ் பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் 199/3 ரன்கள் எடுத்த குஜராத் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று ராஜஸ்தானுக்கு முதல் தோல்வியை பரிசளித்தது. அதன் காரணமாக குல்தீப் சென் 3, சஹால் 2 விக்கெட்டுகளை எடுத்தும் ராஜஸ்தான் பரிதாபமாக தோற்றது.

Advertisement