டி20 உலககோப்பையில் ரிங்கு சிங் இடம்பெற வாய்ப்பில்லை.. காரணம் இதுதான் – வெளியான தகவல்

Rinku-Singh
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு அடுத்து வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கே இருப்பதினால் இந்த தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த டி20உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியலானது நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களின் அடிப்படையிலேயே அமையும் என்று பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களின் அடிப்படையிலேயே தேர்வு அமையும். என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்திய அணியின் பினிஷர் ரோலில் முக்கிய வீரராக பார்க்கப்படும் ரிங்கு சிங் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் அஜித் அகார்கர் தலைமையிலான பிசிசிஐ-யின் தேர்வு குழுவானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர்களில் ஸ்லோவாக செயல்படும் விக்கெட்டுகளை தயாரித்து அதன் மூலம் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்தியனின் வீரர்களை சோதனை செய்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மைதானம் ஸ்லோவாக அமைக்கப்பட்ட வேளையில் 14 பந்துகளை சந்தித்து பவுண்டரி ஏதும் அடிக்காமல் 9 ரன்கள் அடித்து ரிங்கு சிங் சொதப்பினார். இதனால் கடைசி 10-15 பந்துகளுக்காக அவரை சேர்க்க வேண்டுமா? என்ற எண்ணம் பிசிசிஐ இடம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : 0 ரன்னில் தவற விட்ட குஜராத்தை தண்டித்த ரியான் பராக்.. கம்பீரை முந்தி சஞ்சு சாம்சன் 2 அபார சாதனை

இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோரே பினிஷராக இருக்க போது மானவர்கள் என்றும் ரிங்கு சிங் தேவை இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னரே அனைவரது செயல்பாட்டையும் வைத்து டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement