0 ரன்னில் தவற விட்ட குஜராத்தை தண்டித்த ரியான் பராக்.. கம்பீரை முந்தி சஞ்சு சாம்சன் 2 அபார சாதனை

Sanju Samson 68
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் பத்தாம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் 24வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட முயற்சித்து மீண்டும் 24 (19) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவரில் மறுபுறம் திணறிய ஜோஸ் பட்லரும் 8 (10) ரன்களில் ரசித் கான் சுழலில் சிக்கினார். அதனால் 42/2 என தடுமாறிய ராஜஸ்தானுக்கு அடுத்ததாக கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். அதில் 0, 6 ரன்களில் இருந்த போது ரசித் கான் சுழலில் ரியான் பராக் கொடுத்த கேட்ச்சை மேத்தியூ வேட் தவற விட்டார்.

- Advertisement -

வெளுத்த பராக்:
அதை பயன்படுத்திய ரியன் பராக் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி குஜராத்தை கலங்கடித்தார். குறிப்பாக மோகித் சர்மா வீசிய 17வது ஓவரின் முதல் பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸரை பறக்க விட்ட அவர் ரசிகர்களை மகிழ்வித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதே போல் எதிர்ப்புறம் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து ராஜஸ்தான் 100 ரன்கள் தாண்டுவதற்கு உதவினார்.

அந்த வகையில் நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கிய இந்த ஜோடியில் 19 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடிய 3 பவுண்டரி 5 சிக்சருடன் அரை சதமடித்து 76 (48) ரன்கள் குவித்து ஒரு வழியாக ஆட்டமிழந்தார். அப்போது வந்த சிம்ரோன் ஹெட்மயர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 13* (5) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் செய்தார்.

- Advertisement -

அவருடன் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 68* (38) ரன்கள் குவித்தார். அதனால் 20 ஓவரில் ராஜஸ்தான் 196/3 ரன்கள் குவித்து மிரட்டியது. குறிப்பாக 2 கேட்ச்களை தவற விட்டதற்கு 76 ரன்களை வெளுத்து வாங்கிய பராக் இந்த சீசனில் மூன்றாவது அரை சதமடித்து குஜராத்துக்கு தக்க தண்டனை கொடுத்தார். மேலும் இப்போட்டியில் 68* ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் ஐபிஎல் வரலாற்றில் தன்னுடைய 50வது போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: மதிக்காத மும்பையிலிருந்து ரோஹித் வெளியே போய்டுவாரு.. ஆனா ஐபிஎல் அணிகள் அதை செய்யக்கூடாது.. ராயுடு

இதற்கு முன் 2013இல் பெங்களூருவுக்கு எதிராக கௌதம் கம்பீர் கேப்டனாக தன்னுடைய 50வது போட்டியில் 59 (46) ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் ராஜஸ்தான் அணிக்காக அதிக முறை 50+ ரன்கள் வீரர் என்ற ஜோஸ் பட்லர் (24) சாதனையையும் உடைத்த சஞ்சு சாம்சன் (25*) அபார சாதனை படைத்துள்ளார். மறுபுறம் சற்று சுமாராகவே பந்து வீசிய குஜராத் சார்பில் உமேஷ் யாதவ், மோகித் சர்மா, ரசித் கான் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement