ரோஹித் சர்மா மதிக்காத மும்பை அணியிலிருந்து வெளியேறி.. அந்த ஐபிஎல் அணிக்காக விளையாடுவாரு.. ராயுடு கருத்து

Ambati Rayudu 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை தங்களின் புதிய கேப்டனாக அறிவித்தது. அப்போதிலிருந்தே அதற்கு மும்பை ரசிகர்களே மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் சச்சின் தலைமையில் ஒரு கோப்பையை வெல்வதற்கே தடுமாறிய மும்பை ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றதும் குறுகிய காலத்தில் 5 கோப்பைகளை வென்றது.

அதனால் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்த ரோகித் சர்மா இந்தியாவின் கேப்டனாகவும் முன்னேறியுள்ளார். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ள அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். ஆனால் அப்படிப்பட்ட அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை பாண்டியாவை குஜராத்திடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி கேப்டனாக அறிவித்தது.

- Advertisement -

ராயுடு கருத்து:
மறுபுறம் பதவி கைக்கு வந்ததுமே சீனியர் என்றும் பார்க்காத ஹர்டிக் பாண்டியா முதல் போட்டியிலேயே ரோஹித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு வற்புறுத்தினார். அதனால் உச்சகட்ட கோபமடைந்த ரசிகர்கள் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தங்களுடைய சொந்த கேப்டன் என்றும் பாராமல் பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அப்போது “போனது போகட்டும் விடுங்கள். பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள்” என்று ரசிகர்களை கேட்டுக் கொண்ட ரோகித் சர்மா பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். இந்நிலையில் தம்மை மதிக்காத மும்பை அணியிலிருந்து ரோகித் சர்மா அடுத்து வரும் வருடங்களில் வெளியேறுவார் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். அத்துடன் மும்பையை விட எங்கு மதிப்பு கிடைக்கிறதோ அந்த ஐபிஎல் அணியில் ரோஹித் விளையாடுவார் என்றும் ராயுடு கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது ரோஹித் சர்மாவின் முடிவு. இறுதியில் எங்கே செல்ல விரும்புகிறாரோ அங்கே அவரால் போக முடியும். அவரை அனைத்து ஐபிஎல் அணிகளுமே கேப்டனாக நியமிப்பதற்கு விரும்புவார்கள். அது ரோகித் சர்மாவின் முடிவாகும். மும்பை இந்தியன்ஸ் அணியில் நடந்ததை விட சிறப்பாக மரியாதை கொடுத்து நடத்தும் உரிமையாளர் அணிக்கு அவர் செல்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: தோனி செஞ்சா மட்டும் தப்பில்லையா? ஏன் யாருமே வாயை திறக்கல.. மைக்கேல் வாகன், டௌல் அதிருப்தி

இந்த நிலையில் மும்பை அணியில் கேப்டனாக நீக்கப்பட்ட ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வழி நடத்த உள்ளார். 2023 உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் அந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இப்போதிலிருந்தே தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement