தோனி செஞ்சா மட்டும் தப்பில்லையா? ஏன் யாருமே வாயை திறக்கல.. மைக்கேல் வாகன், டௌல் அதிருப்தி

Vaughan and Doull
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் சென்னை தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. முன்னதாக சென்னைக்கு 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த ஜாம்பவான் எம்எஸ் தோனி வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்துள்ளார். அதனால் இம்முறை தோனி சாதாரண விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார்.

மேலும் 42 வயதாகும் அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தோனி பேட்டிங் செய்வதை பார்ப்பதற்காக மொத்த சிஎஸ்கே ரசிகர்களும் தவமாய் கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் இம்முறை 8வது இடத்தில் முடிவை எடுத்துள்ள அவர் பெரும்பாலும் பேட்டிங் செய்ய வருவதில்லை. அதனால் கொல்கத்தாவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் தோனி வந்த போது ரசிகர்கள் வெறித்தனமாக கூச்சலிட்டு வரவேற்பு கொடுத்தனர்.

- Advertisement -

ஏன் வாயை திறக்கல:
குறிப்பாக பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த ரசல் காதை பொத்திக் கொள்ளும் அளவுக்கு ரசிகர்கள் தோனிக்கு ஆரவாரமான வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில் அந்தப் போட்டியில் கொல்கத்தா பேட்டிங் செய்த போது கடைசி நேரத்தில் வந்த அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் 17.3வது பந்தில் முஸ்தபிசூர் ரஹ்மானுக்கு எதிராக பவுண்டரி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்தார்.

இருப்பினும் தம்மை நோக்கி சற்று அகலமான கோணத்தில் வந்த அந்த பந்தை தோனி பிடிக்காமல் அரிதாக தவற விட்டார். ஆனால் அப்போது கேப்டன் ருதுராஜ் முதல் பந்தை வீசிய ரஹ்மான் வரை யாருமே தோனி மீது அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. கடைசியில் ரசல் பெரிய ரன்கள் அடிக்காததால் தோனி தவற விட்ட அந்த கேட்ச் சென்னையின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

இந்நிலையில் தோனி தவற விட்ட அந்த கேட்ச் பற்றி ஏன் யாரும் கோபப்படவில்லை? என முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன் மற்றும் சைமன் டௌல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர்கள் உரையாடியது பின்வருமாறு.
வாகன்: ஒரு எளிதான கேட்ச்சை எம்எஸ் தோனி ஒற்றைக் கையில் தவற விட்டார். அப்போது கேமரா சிஎஸ்கே அணி மீது திருப்பப்பட்டது. ஏனெனில் கேட்சை விட்டது தோனி என்பதால் அது பரவாயில்லை என்பது போல் அவர்கள் இருந்தனர்.

இதையும் படிங்க: இந்திய வீரர்கள் அதுல முன்னேற விராட் கோலி தான் காரணம்.. 2024 டி20 உ.கோ தேர்வுக்கு முன் அகர்கர் கருத்து

டௌல்: அதற்காக யாருமே ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அந்த சமயத்தில் தோனி கேட்ச் தவற விட்டதற்காக பவுலர் கோபமான ரியாக்சன் கொடுத்திருந்தால் அதை நான் விரும்பியிருப்பேன்.
வாகன்: “அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரஹ்மான் கோபமடைய சென்றார். இருப்பினும் தோனி என்பதால் கடைசியில் அவர் அமைதியாக சென்று விட்டார்” என்று உரையாடினார்கள்.

Advertisement