இந்திய வீரர்கள் அதுல முன்னேற விராட் கோலி தான் காரணம்.. 2024 டி20 உ.கோ தேர்வுக்கு முன் அகர்கர் கருத்து

Ajit Agarkar 2
- Advertisement -

விரைவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை இந்திய தேர்வுக்குழு கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளி வந்தன. அதாவது வெஸ்ட் இண்டீஸில் உள்ள பிட்ச்கள் கொஞ்சம் ஸ்லோவானதாக இருக்கும். மறுபுறம் விராட் கோலி எப்போதுமே நங்கூரமாக விளையாடி சற்று குறைவான ஸ்டிரைக் ரேட்டில் பெரிய ரன்கள் குவிக்கும் ஸ்டைலை கொண்டவர்.

எனவே அந்த ஸ்டைலை கொண்டுள்ள விராட் கோலியை உலகக் கோப்பையில் கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தேர்வுக்குழு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது. அதற்கேற்றார் போல் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் விராட் கோலி 316* ரன்கள் அடித்துள்ளார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

அகர்கர் பாராட்டு:
ஆனால் அந்த ரன்களை சற்று குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் எடுத்ததால் விராட் கோலி தான் பெங்களூருவிவின் தோல்விக்கு காரணமாக இருப்பதாக விமர்சனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மெதுவான ஐபிஎல் சதத்தை அடித்த விராட் கோலி மோசமான சாதனையும் படைத்தார். அதனால் 2024 டி20 உலகக் கோப்பையில் அவர் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி தொடர்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு விராட் கோலி எடுத்துக்காட்டாக இருப்பதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பாராட்டு தெரிவித்தார். அதனால் இப்போதுள்ள 15 வயது வீரர்களும் ஃபிட்டாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை பாருங்கள். அவர் ஃபிட்னஸ்க்கு அளவுகோலை அமைத்தவர்களில் ஒருவர். கடந்த 10 – 15 வருடங்களாக விளையாடி வரும் அவர் மென்மேலும் ஃபிட்டாகியுள்ளார்”

- Advertisement -

“அதற்கான முடிவுகளை நீங்கள் பாருங்கள். அவரைப் போன்ற ஒருவர் முன்னுதாரணமாக இருந்தால் உடல் தகுதிக்கு தேவையான விஷயங்களை முன்வைத்தால் உங்களுக்கு தேவையான உடற்பயிற்சி நிலைகள் படிப்படியாக முன்னேறும். இங்கே நடக்கும் அனைத்து அகடமியிலும் பிசிசிஐ கருவியை வைத்துள்ளது. எனவே நீங்கள் வேகமாக கற்றுக் கொள்ள முடியும்”

இதையும் படிங்க: ஏஐ டெக்னாலஜி கூட தோற்றுப்போகும்.. ஆனா தோனியின் அந்த திறமை எப்போவும் தோற்காது.. அகர்கர் பாராட்டு

“இப்போதுள்ள 15 – 16 வயது பையன்கள் தாங்கள் இருக்க வேண்டியதை விட ஃபிட்டாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஃபிட்னஸ் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் தேவையான வசதிகளும் இருக்கிறது” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி கண்டிப்பாக டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று பிரைன் லாரா போன்ற பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement