ஏஐ டெக்னாலஜி கூட தோற்றுப்போகும்.. ஆனா தோனியின் அந்த திறமை எப்போவும் தோற்காது.. அகர்கர் பாராட்டு

Ajit Agarkar
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜ் கையில் ஜாம்பவான் எம்.எஸ். தோனி ஒப்படைத்தார். உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் சேர்ந்த அனுபவமில்லாத அவர் 2007ஆம் ஆண்டு இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்று அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்தி டி20 உலகக் கோப்பையை வென்று காட்டினார்.

அப்படியே கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து 2011 உலகக் கோப்பையை வென்ற தோனி தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றார். அதனால் உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து உலகக் கோப்பைகளை வென்ற கேப்டனாக சாதனை படைத்த அவரது தலைமையில் 2010ஆம் ஆண்டு இந்தியா நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் முன்னேறியது.

- Advertisement -

அகர்கர் பாராட்டு:
அதே போல ஐபிஎல் தொடரிலும் 14 வருடங்கள் சென்னையின் கேப்டனாக செயல்பட்ட அவர் 5 கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் பெற்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நவீன கிரிக்கெட்டில் எதிரணியின் பலம் பலவீனம் உட்பட பல்வேறு அம்சங்களை தெரிந்து கொள்வதற்காக செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி (ஏஐ) வந்துள்ளதாக இந்தியாவின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அந்த டெக்னாலஜி கூட சில நேரங்களில் வேலை செய்யாமல் போகலாம் ஆனால் தோனியின் கேப்டன்ஷிப் எப்போதும் வேலை செய்யும் என்று அகர்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது உங்களுக்கு கிடைக்கும் டேட்டா அற்புதமானது. அதை வைத்து உங்களால் மொத்த போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை திட்டமிட முடியும்”

- Advertisement -

“அதை அனைவரும் தற்போது பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அது அனைத்து நேரங்களிலும் வேலை செய்யும் என்று அர்த்தமல்ல. உங்களுக்கு களத்தில் ஒரு கேப்டன் தேவை. ஏனெனில் எப்போதும் நீங்கள் திட்டமிடும் அனைத்தும் உங்களுடைய வழியில் செல்லாது. சில நாட்களில் அது வேலை செய்யும். ஆனால் பல நாட்களில் வேலை செய்யாது. அப்போது தான் உங்களுக்கு மனிதனின் உள்ளுணர்வுகள் தேவைப்படும்”

இதையும் படிங்க: இந்த ஒரு ப்ளஸ் போதும்.. டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி கண்டிப்பா ஆடுவாரு – வெளியான தகவல்

“அதனாலேயே நீங்கள் எம்எஸ் தோனியை மகத்தான கேப்டன் என்றழைக்கிறீர்கள். ஏனெனில் அவர் போட்டியை பற்றிய உணர்வைக் கொண்டிருப்பார். அவருக்கு என்ன நடக்கிறது போட்டி எப்படி மாறுகிறது என்பது தெரியும்” கூறினார். அதாவது கிரிக்கெட்டில் “ஏஐ” டெக்னாலஜி வந்தாலும் களத்தில் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவதற்கு தோனி போன்ற கேப்டன்கள் எப்போதும் அவசியம் என்று அகர்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement