இந்த ஒரு ப்ளஸ் போதும்.. டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி கண்டிப்பா ஆடுவாரு – வெளியான தகவல்

Kohli
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஒரு வார இடைவெளியில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் எதிரானது நடைபெற உள்ளது. ஜூன் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை இந்த தொடரானது நடைபெற இருக்கிறது.

இந்த தொடருக்காக மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் வேளையில் இந்த தொடரில் எந்த அணி கோப்பையை கைப்பற்றப்போகும் என்கிற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதோடு கடந்த சில ஆண்டுகளாகவே ஐ.சி.சி கோப்பைகளை தவற விட்டு வரும் இந்திய அணி இம்முறையாவது டி20 உலக கோப்பை கைப்பற்றும் முனைப்புடன் தயாராக இருக்கிறது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடர்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று பேசப்பட்ட விராட் கோலி கட்டாயம் அந்த தொடரில் விளையாடுவார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானங்கள் விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்பதனாலும் டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதாலும் நீக்கப்படலாம் என்றும் பேசப்பட்டு வந்தது.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விராத் கோலி மிகச் சிறப்பான பார்மை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு நிச்சயம் மெதுவாக இருக்கும் ஆடுகளங்களில் நிலைத்து நின்று விளையாடக்கூடிய வீரர் தேவை என்கிற காரணத்தினால் 35 வயதான விராட் கோலி கட்டாயம் 15 பேர் கொண்ட இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று பிரபல கிரிக்கெட் நாளிதழ் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : இதுக்காக தோனி 2 வருஷமா பிளான் பண்ணாரு.. சிஎஸ்கே கலாச்சாரத்தை மாற்ற மாட்டேன்.. ருதுராஜ் பேட்டி

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கும் விராட் கோலி கட்டாயம் டி20 உலக கோப்பையில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் விராட் கோலியின் ரசிகர்கள் மகிழ்ச்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement