விராட் கோலி இல்ல, அவர் தான் டி20 கிரிக்கெட்டிம் ஆல் டைம் கிரேட் பிளேயர் – ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டு

ABD
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை மிஞ்சும் அளவுக்கு டி20 போட்டிகள் ரசிகர்களின் அபிமான கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது. 2 – 3 மணி நேரத்திற்குள் முடிவை கொடுக்கும் இந்த போட்டிகளில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எந்த துறையாக இருந்தாலும் அதிரடியாக அதிவேகமாக செயல்படுவதே வெற்றியின் ரகசியமாகும். அதற்கு ஈடு கொடுத்து கடந்த 10 வருடங்களில் நிறைய வீரர்கள் தங்களது அபார திறமையால் தாங்கள் விளையாடிய அணிகளுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து பல மலைக்க வைக்கும் சாதனைகளை படைத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்கள்.

Gayle

- Advertisement -

அந்த வகையில் கடந்த 10 வருடங்களில் கிறிஸ் கெயில், விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ், எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா போன்றவர்கள் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி மிகச்சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்களாக செயல்பட்டுள்ளார்கள். அதில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த கிறிஸ் கெயில் 10,000 ரன்கள் அடித்த ஒரே வீரராகவும் அதிக சிக்சர்கள், அதிக சதங்கள் அடித்த வீரராகவும் பல உலக சாதனைகளை படைத்து டி20 கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்றழைக்கும் அளவுக்கு அற்புதமான சாதனைகளை படைத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

ஏபி டீ பாராட்டு:
அதே போல் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள விராட் கோலி இந்திய டி20 கிரிக்கெட்டின் நாயகனாக போற்றப்படுகிறார். இவர்களுடன் கேப்டனாகவும் பினிஷராகவும் அசத்தும் தோனி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் 5 ஐபிஎல் கோப்பைகளை அசால்ட்டாக வென்ற கேப்டனாகவும் சாதனைப் படைத்துள்ள ரோஹித் சர்மா ஆகியோரும் வரலாற்றின் சிறந்த டி20 வீரராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள்.

Rashid-Khan

மேலும் மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னா, முரட்டுத்தனமாக அடிக்கும் கைரன் பொல்லார்ட், மகத்தான ஆல் ராவுண்டராக அசத்திய ட்வயன் ப்ராவோ ஆகியோரும் வரலாற்றின் சிறந்த டி20 வீரர்களாக போற்றப்படுகிறார்கள். இருப்பிடம் தம்மைப் பொறுத்த வரை கருணை காட்டாமல் சரமாரியாக அடித்து நொறுக்கும் முரட்டுத்தனமான பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தும் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான சமயங்களில் அடிக்க முடியாத அளவுக்கு அற்புதமாக பந்து வீசம் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் தான் சிறந்த ஆல் டைம் கிரேட் வீரர் என்று தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஒரு டி20 லெஜெண்டாக பாராட்டப்படும் அவர் தன்னுடைய நண்பரான விராட் கோலியை தேர்வு செய்யாமல் ஒரு ஸ்பின்னரான ரசித் கானை சிறந்த டி20 வீரராக தேர்வு செய்து இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் என்னுடைய ஆல் டைம் கிரேட் பிளேயர் ரசித் கான் தவிர்த்து வேறு யாருமில்லை. அவர் 2 துறைகளிலும் மேட்ச் வின்னராக செயல்பட கூடியவர். அவர் சிங்கத்தைப் போன்ற தைரியம் கொண்ட மனதுடன் களத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். அவர் எப்போதும் தனது அணிக்காக போட்டியை வெல்ல விரும்புவார்”

ABD

“உங்களுக்கு மிகவும் போட்டியை கொடுக்கக்கூடிய அவர் டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவராக எப்போதும் இருப்பார். சொல்லப் போனால் சிறந்த வீரர்களில் அவர் ஒருவர் கிடையாது. மொத்தமாகவே அவர் மிகச் சிறந்தவர்” என்று பாராட்டினார். அவர் கூறுவது போல மகத்தான பேட்ஸ்மேன்களையும் தனது மாயாஜால சுழலால் பெரிய ரன்களை அடிக்க விடாமல் சொற்ப ரன்களில் அவுட்டாக்கி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ரசித் கான் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக இளம் வயதில் 500 விக்கெட்டுகளை எடுத்த வீரராக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: IND vs AUS : இந்தியா அதுல பலவீனமா இருக்காங்க, அதான் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்குறாங்க – கவாஸ்கர் அதிரடியான கருத்து

மேலும் சமீப காலங்களில் பேட்டிங் துறையிலும் அதிரடியாக ரன்களை சேர்த்து வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதால் தம்மை பொறுத்த வரை அவர் தான் மிகச்சிறந்த டி20 வீரர் என்று ஏபி டீ வில்லியர்ஸ் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

Advertisement