- Advertisement -
இந்திய கிரிக்கெட்

500 விக்கெட்ஸ் 6 சதம்.. யோசிக்காம செய்ய மாட்டாரு.. இதெல்லாம் ஈஸி கிடையாது.. அஸ்வினை வாழ்த்திய ரங்கனா ஹெராத்

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த தமிழக நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஓய்வு பெற்றார். 2010 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வந்த அவர் இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச (765) விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் 2012 – 2024 வரை சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்காமல் இருக்கவும் அவர் முக்கிய பங்காற்றினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனுக்கு நிகராக அதிக தொடர்நாயகன் விருதுகளையும் வென்று அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார். 2011 உலகக் கோப்பை வெற்றியாளரான அவர் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் ஓவரை வீசி இந்தியா கோப்பையை வெல்ல உதவியதை மறக்க முடியாது. அது போக ஐசிசி தரவரிசையிலும் கடந்த வருடம் அஸ்வின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஜொலித்தார்.

- Advertisement -

யோசித்து முடிவு:

இவ்வளவு வெற்றிகளில் பங்காற்றி சாதனைகளை படைத்த அஸ்வின் திடீரென ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் இருந்தது. அதனாலேயே அஸ்வின் ஓய்வை அறிவித்ததாக நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.

இந்நிலையில் அஸ்வின் யோசிக்காமல் ஓய்வை அறிவித்திருக்க மாட்டார் என்று முன்னாள் இலங்கை வீரர் ரங்கனா ஹெராத் தெரிவித்துள்ளார். அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியதற்கு பின்வருமாறு. “அற்புதமான கேரியரைக் கொண்டதற்கு நான் அஸ்வினை வாழ்த்த விரும்புகிறேன். ஏனெனில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுப்பது எளிதல்ல”

- Advertisement -

அஸ்வினுக்கு வாழ்த்து:

“அது போக அவர் 6 சதங்கள் உட்பட நிறைய ரன்களும் குவித்துள்ளார். அடிப்படையில் தன்னுடைய சொந்த வழியில் அவர் இந்தியாவுக்காக நிறைய போட்டிகளை வென்றுள்ளார். அவருடைய வருங்காலத்திற்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தங்களுடைய ஓய்வு நேரம் எப்போது வரும் என்பது தெரியும். அதை நாங்கள் சரியான நேரத்தில் எடுத்தாக வேண்டும்”

இதையும் படிங்க: 904 பாய்ண்ட்ஸ்.. அஸ்வினின் ஆல் டைம் சாதனையை சமன் செய்த ஜஸ்ப்ரித் பும்ரா.. கபில் தேவ் கூட செய்யாத சாதனை

“அந்த வகையில் அஸ்வின் இந்த முடிவுக்கு வருவதற்கு முன்பாக ஒவ்வொரு விஷயங்களிலும் யோசித்திருப்பார் என்று நான் சொல்வேன். ஓய்வு என்பது தனிப்பட்ட நபரை பொறுத்தது. அதை சரியான நேரத்தில் எடுக்கும் அளவுக்கு அஸ்வின் புத்திசாலி மற்றும் புத்திசாலித்தனமான பவுலர் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அஸ்வின் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -