சோக்கர் வரலாற்றை தான் மாத்த முடியல.. அதையாச்சும் செஞ்சுருக்கலாம்.. மனசு வலிக்குது.. ரமீஸ் ராஜா ஆதங்கம்

Ramiz Raza
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த 12வது லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 191 ரன்கள் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தனர்.

அதை அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 86, ஸ்ரேயாஸ் ஐயர் 53* ரன்களும் எடுத்து 30.3 ஓவரிலேயே 117 பந்துகள் மீதம் வைத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் ஷாஹின் அப்ரிடி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்த நிலையில் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்த இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

ரமீஸ் ஏமாற்றம்:
அதை விட 1992 முதல் இதுவரை சந்தித்த 8 போட்டிகளிலும் தொடர்ந்து பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய அணி தங்களுடைய வெற்றி சரித்திரத்தையும் கவுரவத்தையும் தக்கவைத்து அசத்தியுள்ளது. மறுபுறம் 2017, 2021 ஐசிசி தொடர்களை போல இம்முறை உலகக்கோப்பையில் நிச்சயம் இந்தியாவை தோற்கடிப்போம் என்று கேப்டன் பாபர் அசாம் சொன்னபோதிலும் அதற்கேற்றார் போல் பாகிஸ்தான் செயல்படாதது அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் மோசமான வரலாற்றை மாற்ற முடியாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக வெற்றிக்காக போராடியிருக்கலாம் என்று பாகிஸ்தான் அணி மீது முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் இந்த பெரிய தோல்வி மனதளவில் வலியை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது காயப்படுத்தும். ஏனெனில் பாகிஸ்தான் 3 துறைகளிலும் மோசமாக வீழ்த்தப்பட்டார்கள். இது போன்ற போட்டிகளில் உங்களால் வெல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் வெற்றிக்காக போட்டியிடுங்கள். ஆனால் பாகிஸ்தானால் அதை செய்ய முடியவில்லை. இதனால் அவர்கள் சிலவற்றை பெற்றிருக்கிறார்கள்”

இதையும் படிங்க: 1999 அட்வைஸ் நல்லாருந்துச்சு நண்பா.. தேடி சென்று கலாய்த்த சச்சின்.. மீண்டும் சவால் விட்ட அக்தர்

“இதற்காக அவர்களை இந்தியாவுக்கு எதிரான சோக்கர்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அது வைத்திருப்பதற்கான சிறந்த பட்டமல்ல. வரலாற்று வெற்றியை பெறுவதில் பாகிஸ்தான் அணியினர் மனதளவிலும் திறமையளவிலும் லேசாக தேக்கமடைந்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது 99% ரசிகர்கள் உட்பட அனைத்தும் உங்களுக்கு எதிராக இருக்கும் என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் பாகிஸ்தானை 4 – 5 வருடங்கள் வழி நடத்தியுள்ள பாபர் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். மறுபுறம் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து தங்களுடைய வெற்றி நிலைப்பாட்டை கடைபிடிப்பதற்கு பாராட்ட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement