1999 அட்வைஸ் நல்லாருந்துச்சு நண்பா.. தேடி சென்று கலாய்த்த சச்சின்.. மீண்டும் சவால் விட்ட அக்தர்

- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அனைவரும் எதிர்பார்த்த அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற 12வது லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மோசமாக செயல்பட்டு 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ், பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி 6 சிக்சருடன் 86 ரன்கள் குவித்தார். அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் 53* ரன்கள் எடுத்ததால் 30.3 ஓவரிலேயே எளிதாக வென்று இந்தியா 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

கலாய்த்த சச்சின்:
அதனால் ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்களை எடுத்தும் பாகிஸ்தான் படுதோல்வியை சந்திப்பதை தவிர்க்க முடியவில்லை. மறுபுறம் உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தங்களுடைய வெற்றிக் கொடியை மீண்டும் பறக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்போட்டியில் இந்தியாவை நிச்சயம் பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று வழக்கம் போல முன்னாள் வீரர் சோயப் அக்தர் பேசினார்.

குறிப்பாக 1999 கொல்கத்தா டெஸ்டில் சச்சின் டெண்டுல்கரை தாம் கோல்டன் டக் அவுட்டாக்கியதால் பாகிஸ்தான் வென்றது போல இம்முறையும் சாதிக்கும் என்றும் அவர் ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டார். இந்நிலையில் “என்னுடைய நண்பா. உங்களுடைய அணி உங்களின் ஆலோசனையை பின்பற்றினார்கள். அதனால் அவர்களுடைய செயல்பாடுகள் மொத்தமாக மட்டமாக இருந்தது” என்று அதே புகைப்படத்திற்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பதிலளித்து சோயப் அக்தரை கலாய்த்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அதற்காக அசராத சோயப் அக்தர் மீண்டும் சச்சினை பாராட்டி இது போன்ற சவால்கள் தொடரும் என்று பதிலளித்துள்ளது பின்வருமாறு. “என்னுடைய நண்பா. நீங்கள் கிரிக்கெட்டில் விளையாடிய ஆல் டைம் மகத்தானவர். மேலும் நீங்கள் கிரிக்கெட்டின் மிகப்பெரிய அம்பாசிடராக இருக்கிறீர்கள். ஆனாலும் இது போன்ற நமம்முடைய நட்பு ரீதியான மோதல்கள் எப்போதும் மாறாது” என்று கூறியுள்ளார்.

அத்துடன் விரேந்தர் சேவாக், முனாப் படேல் போன்ற மேலும் சில முன்னாள் இந்திய வீரர்கள் அக்தரை இதே போல ட்விட்டரில் கலாய்த்து பதிலடி கொடுத்துள்ளனர். ஆனாலும் எதிரியாக இருக்கும் நண்பன் இந்தியா மீது வந்து இது போன்ற விமர்சனங்களை வைப்பேன் என்று சோயப் அக்தர் திறந்த மனதுடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement