ஐ.பி.எல் இருந்து என்ன புண்ணியம். இந்தியாவால ஒன்னும் பண்ண முடியலயே – குத்திக்காட்டிய ரமீஸ் ராஜா

Ramiz Raja
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் குரூப் இரண்டில் முதல் அணியாக அரையறுதிக்கு முன்னேறிய இந்திய அணியானது நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. அதே வேளையில் இந்திய அணி இருந்த அதே குரூப்பில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்த பாகிஸ்தான் அணியானது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Babar Azam Moahmmed Rizwan Pak vs NZ

- Advertisement -

இப்படி பலம் வாய்ந்த இந்திய அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியதும் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாது என்று நினைத்த பாகிஸ்தான் அணி தற்போது இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அரை இறுதியில் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்து வரும் வேளையில் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் குறித்தும் இந்திய அணி பெற்ற இந்த தோல்வி குறித்தும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரமீஸ் ராஜா சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : பில்லியன் டாலர் கிரிக்கெட் லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் அணிகள் கூட எங்களுக்கு பின்னால்தான் உள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் பில்லியன் டாலர் கிரிக்கெட்டரை விட சிறந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் ஏதோ ஒரு விஷயத்தை சரியாக செய்து கொண்டிருக்கிறோம் அதனால் தான் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கும் நாங்கள் முன்னேறி உள்ளோம்.

INDvsPAK

எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே திறமையான வீரர்கள் என்று ரமீஸ் ராஜா கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர்களில் பாகிஸ்தான அணியை தவிர மற்ற நாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

ஐ.பி.எல் தொடரில் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டுவதோடு மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டிலும் தங்களை முன்னேற்றிக்கொள்ள ஐபிஎல் உதவுகிறது என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்திய அணி ஐபிஎல் தொடங்கிய பிறகு ஒரு டி20 உலகக் கோப்பையை கூட வென்றது கிடையாது என்று நேரடியாக ரமீஸ் ராஜா குத்தி காட்டியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs NZ : நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணிக்கு – புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

அவர் கூறியது போலவே கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கிய பின்னர் பல்வேறு சிறப்பான வீரர்கள் ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணிக்கு கிடைத்திருந்தாலும் இதுவரை நம்மால் டி20 உலக கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மைதான்.

Advertisement