IND vs NZ : நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணிக்கு – புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

Hardik Pandya
- Advertisement -

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணியானது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்ற தோல்வியை தொடர்ந்து இம்முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவற விட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ள இவ்வேளையில் இந்திய அணியானது அடுத்த கட்டத்திற்கு நகரவுள்ளது.

David Miller Hardik Pandya IND vs SA

அந்தவகையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 தொடர் முடிந்த கையோடு நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது வரும் நவம்பர் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது எதிர்வரும் நவம்பர் 25-ஆம் தேதி முதல் துவங்குகிறது.

Laxman

ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி வரும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு இந்த நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இம்முறை இந்திய அணியை ஹார்டிக் பாண்டியா வழி நடத்துகிறார். அதேபோன்று துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் செயல்பட உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடருக்கான புதிய தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனெனில் தற்போது டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை தலைமை தாங்கி பயிற்றுவித்து வந்த ராகுல் டிராவிடின் பணிச்சுமை காரணமாக ஓய்வெடுத்துக் கொள்ள உள்ளதால் வி.வி.எஸ் லட்சுமணன் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இனி சீனியர்கள் வேலைக்கு ஆகமாட்டாங்க, டீமை மொத்தமாக கலைச்சுட்டு அவங்களுக்கு சான்ஸ் கொடுங்க – சேவாக் அதிரடி கருத்து

ஏற்கனவே அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் டி20 உலககோப்பையை இந்திய அணி தவறவிட்டுள்ளதால் இனி இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு நகரவே இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement