இனி சீனியர்கள் வேலைக்கு ஆகமாட்டாங்க, டீமை மொத்தமாக கலைச்சுட்டு அவங்களுக்கு சான்ஸ் கொடுங்க – சேவாக் அதிரடி கருத்து

Sehwag
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா வலுவான இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் வழக்கம் போல சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு வெளியேறியது.

Jos Buttler Rohit Sharma KL Rahul

- Advertisement -

அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 27, கேஎல் ராகுல் 5, சூரியகுமார் யாதவ் 14 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக விராட் கோலி 50 (40) ரன்களும் ஹர்டிக் பாண்டியா 63 (33) ரன்களும் குவித்து 20 ஓவர்களில் 168/8 ரன்கள் சேர்க்க உதவினர். ஆனால் 169 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு சுமாராக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் – ஜோஸ் பட்லர் ஓப்பனிங் ஜோடி 170/0 ரன்கள் குவித்து எளிதாக பைனலுக்கு அழைத்துச் சென்றனர்.

வேலைக்கு ஆகாது:

இந்த போட்டியில் இந்தியாவின் சுமாரான பவுலிங் மற்றும் மோசமான ஓப்பனிங் பேட்டிங் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அத்துடன் இந்த தொடர் முழுவதும் ரோகித், ராகுல், ஷமி, புவனேஸ்வர் குமார், அஷ்வின், தினேஷ் கார்த்திக் என வயதான மூத்த வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்வியை பரிசளித்தது. அதன் காரணமாக காலம் கடந்த சீனியர் வீரர்களை கழற்றி விட்டு டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான துடிதுடிப்பான இளம் வீரர்களை தேர்வு செய்து 2007இல் தோனி தலைமையில் இளம் படை கோப்பையை வென்றது போன்ற அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

IND vs NED Rohit Sharma Axar Patel KL Rahul

இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் முக்கியமற்ற இருதரப்பு தொடர்களில் சீனியர் வீரர்கள் ஓய்வெடுக்கும் போது வாய்ப்பு பெறும் இளம் வீரர்கள் அபாரமாக செயல்பட்டதாக முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். ஆனால் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அவர்களை கழற்றி விட்டு வாய்ப்பை பெறும் சீனியர் வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதாக வேதனையை வெளிப்படுத்தும் அவர் வருங்காலங்களில் அனைத்து தொடர்களிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி பிரபல கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் சொந்த மண்ணில் நடைபெறும் இருதரப்பு தொடர்களை வெல்கிறீர்கள். ஆனால் அதில் உங்களுடைய எத்தனை டாப் வீரர்கள் விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் சாதாரண இருதரப்பு தொடர்களில் சீனியர்கள் ஓய்வெடுக்கும் போது வாய்ப்பு பெறும் புதிய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுக்கிறார்கள். எனவே அங்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் அவர்களை நீங்கள் ஏன் இங்கே (உலகக்கோப்பையில்) முயற்சித்துப் பார்க்கக் கூடாது. நமது இந்தியாவில் நிறைய பயமின்றி விளையாடும் வீரர்களை பற்றி நாம் தினமும் பேசிக்கொண்டிருக்கிறோம்”

Rohit Sharma Virender Sehwag

“குறிப்பாக இஷான் கிசான், சஞ்சு சாம்சன், பிரிதிவி ஷா அல்லது ருதுராஜ் கைக்வாட் ஆகியோரை பாருங்கள். அவர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி ரன்களை குவித்துள்ளார்கள். இப்போது கூட அடுத்ததாக நடைபெறும் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் சீனியர் வீரர்கள் ஓய்வெடுக்க செல்வதால் இவர்கள் விளையாடப் போகிறார்கள். ஆனால் நியூசிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் அவர்கள் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது?”

“எனவே சீனியர் வீரர்கள் மீதும் அழுத்தம் உள்ளது. மேலும் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால் நீங்களும் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்று பிசிசிஐ சீனியர் வீரர்களிடம் சொல்ல வேண்டும். ஒருவேளை நீங்கள் சிறப்பாக செயல்படாமல் போனால் “நன்றி போய் வாருங்கள்” என்று அவர்களிடம் பிசிசிஐ தைரியமாக பேச வேண்டும்” என்று கூறினார்.

Advertisement