விராட் கோலியோட பாபர் அசாமை கம்பேர் பண்ணாதீங்க ப்ளீஸ். சரியான காரணத்தை சொன்ன – ரமேஸ் ராஜா

Ramiz-Raja
- Advertisement -

நவீன மாடர்ன் டே கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த வீரராக பார்க்கப்பட்ட வரும் விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இதுவரை எண்ணில் அடங்கா பல சாதனைகளை படைத்து சச்சினுக்கு அடுத்து மிகப்பெரிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். தற்போது 35 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் விராட் கோலி கடந்த 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார்.

அடுத்த கட்ட தலைமுறை வீரர்களுக்கு முன்னோடியாக இருக்கும் விராட் கோலியுடன் அவ்வப்போது ஒரு சில வீரர்கள் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டு வந்தாலும் அவர்களை எல்லாம் விட விராட் கோலி எப்போதுமே தனித்துவமாக முன்னிலை பெற்று வருகிறார். அந்த வகையில் நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடரிலும் விராட் கோலியின் அற்புதமான ஆட்டம் தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சமீப காலமாகவே விராட் கோலியுடன் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டு வருவது வழக்கமான ஒரு கதையாகவே இருந்து வருகிறது. ஆனாலும் விராட் கோலி போன்று இத்தனை ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒருவர் சிறப்பாக செயல்பட முடியுமா? என்று கேட்டால் நிச்சயம் முடியாது என்றே கூறலாம்.

ஏனெனில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நடைபெற்று வரும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேவேளையில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரமேஸ் ராஜா விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசக்கூடாது என்று சரியான கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட வேண்டாம். ஏனெனில் ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் எப்போதுமே கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் பாபர் அசாமல் அது முடிவதில்லை. இந்த உலகக் கோப்பை தொடரிலும் விராத் கோலி தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு சதம் மற்றும் சில அரைசதங்களை அடித்துள்ளார். அதேபோன்று அரைசதம் கடந்தால் அதனை கோலி பெரிய இன்னிங்ஸ்சாக மாற்றும் திறனுடையவர். மேலும் அனைத்து போட்டியிலும் அவர் ரன்களை குவித்து வருகிறார்.

இதையும் படிங்க : வராமையே இருந்துருக்கலாம்.. இங்கிலாந்துக்கு உங்க சேவை போதும் கிளம்புங்க.. நட்சத்திர வீரர்களை விளாசிய மைக்கேல் வாகன்

ஆனால் பாபர் அசாம் இந்த தொடரில் இரண்டு அரை சதங்கள் அடித்தாலும் அவரால் ஒரு பெரிய சதத்தையோ ஒரு பெரிய இன்னிங்க்ஸையோ விளையாட முடியவில்லை. ஆனால் விராட் கோலி தொடர்ச்சியாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே விராட் கோலி போன்ற ஒரு வீரருடன் பாபர் அசாமை தற்போதே ஒப்பிட்டு பேசக்கூடாது என்று ரமேஸ் ராஜா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement