வராமையே இருந்துருக்கலாம்.. இங்கிலாந்துக்கு உங்க சேவை போதும் கிளம்புங்க.. நட்சத்திர வீரர்களை விளாசிய மைக்கேல் வாகன்

Micheal Vaughan 2
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் எதிரணிகளை அடித்து நொறுக்கி கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து முதல் 6 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்து தடுமாறி வருகிறது. அதனால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இத்தனைக்கும் ஜோஸ் பட்லர் தலைமையில் டேவிட் மாலன், லிவிங்ஸ்டன் போன்ற தரமான அதிரடி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்தியாவின் கால சூழ்நிலைகளின் நன்கு தெரிந்திருந்தும் இத்தொடரில் சொதப்பியது இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதை விட சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்காக 2019 உலகக்கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று மகத்தான ஆல் ரவுண்டராக திகலைம் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிவித்த ஓய்விலிருந்து கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

போதும் கிளம்புங்க:
ஆனால் காயத்தால் பெரும்பாலும் விளையாடாத அவர் இந்தியாவுக்கு எதிரான முக்கிய போட்டியில் ஷமியிடம் க்ளீன் போல்ட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தையே கொடுத்தார். அதே போல சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான மொய்ன் அலியும் இத்தொடரில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தாமல் மோசமாக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளார்.

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கொண்டு விளையாடக்கூடாது என்று தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் 50 ஓவர் கிரிக்கெட்டுக்கு மொய்ன் அலியும் சரிப்பட்டு வர மாட்டார் என்று விமர்சித்துள்ளார். குறிப்பாக அடுத்த உலகக் கோப்பையில் பென் ஸ்டோக்ஸ் விளையாடக்கூடாது என்று வெளிப்படையாகவே சொல்லும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார். நீங்கள் அந்த முடிவை எடுக்க வேண்டும். அடுத்த உலகக் கோப்பையில் அவர் விளையாடக்கூடாது என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் முடிவெடுத்தால் கண்டிப்பாக விளையாடக் கூடாது. இது இங்கிலாந்து கிரிக்கெட்டை மறு சீரைமைப்பதற்கான நேரமாகும். அதில் மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் 50 ஓவர் கிரிக்கெட்டுக்கு குறைவாக தெரிகின்றனர்”

இதையும் படிங்க: வங்கதேசத்தை தெறிக்க விட்டு மிட்சேல் ஸ்டார்க்கை முந்திய ஷாஹீன் அப்ரிடி.. புதிய உலக சாதனை

“எனவே ஹரி ப்ரூக் அணியில் இணைக்கப்பட வேண்டும். பென் ஸ்டோக்ஸ் கண்டிப்பாக அடுத்த 4 வருட காலகட்டத்திற்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை. எனவே நீங்கள் அந்த முடிவை எடுக்க வேண்டும். உலகக்கோப்பை போன்ற உயர்தனமான கருணையில்லாத போட்டிகளில் நீங்கள் எவ்வளவு பவர் அல்லது பெரிய பெயர் கொண்ட வீரர்கள் என்பது முக்கியமல்ல. இந்த சூழ்நிலையில் அடுத்த 3 போட்டிகளில் ஹரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், கஸ் அட்கின்ஷன் போன்ற இளம் வீரர்கள் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement