வங்கதேசத்தை தெறிக்க விட்டு மிட்சேல் ஸ்டார்க்கை முந்திய ஷாஹீன் அப்ரிடி.. புதிய உலக சாதனை

Shaheen Afridi
Advertisement

இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 31ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற 31வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. ஏற்கனவே செமி ஃபைனல் வாய்ப்பை ஏறத்தாழ கோட்டை விட்ட இவ்விரு அணிகளில் தொடர்ச்சியாக 4 தோல்விகளை பதிவு செய்து திண்டாடி வரும் பாகிஸ்தான் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

அந்த சூழ்நிலையில் மதியம் 2 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மறுபுறம் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் இமாம்-உல்-ஹக் அதிரடியாக நீக்கப்பட்டு பகார் ஜமான் மீண்டும் துவக்க வீரராக சேர்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய வங்கதேசத்திற்கு முதல் ஓவரிலேயே தன்சித் ஹசனை தன்னுடைய அதிரடியான வேகத்தால் சாகின் அப்ரிடி டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அப்ரிடியின் சாதனை:
அதே வேகத்தில் அடுத்ததாக வந்த நஜ்முல் சாண்டோவை 3வது ஓவரில் 3 ரன்களில் அவுட்டாக்கிய ஷாஹீன் அப்ரிடி ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்து அசத்தினார். சொல்லப்போனால் 51 போட்டிகளிலேயே 100 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்து வேகப்பந்து வீச்சாளர் என்ற ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (போட்டிகள்):
1. ஷாஹீன் அப்ரிடி : 51*
2. மிட்சேல் ஸ்டார்க் : 52
3. ஷேன் பாண்ட்/ முஸ்தபிஷர் ரகுமான் : தலா 54

அந்த வகையில் பாகிஸ்தானின் முதன்மை பந்து வீச்சாளரான அவர் இந்த தொடரில் ஆரம்பம் முதலே தடுமாறியது அடுத்தடுத்த தோல்விகளுக்கு முக்கிய காரணமானது. இருப்பினும் இந்த போட்டியில் மீண்டும் புதிய பந்தை ஸ்விங் செய்து அடுத்தடுத்த விக்கெட்களை எடுத்த அவர் தன்னுடைய தரத்தை காட்டி பாகிஸ்தானுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

- Advertisement -

அதே உத்வேகத்துடன் அடுத்ததாக வந்த நட்சத்திர அனுபவ வீரர் முஸ்பிக்கர் ரஹீமை 5 ரன்களில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹரிஷ் ரவூப் பெவிலியன் அனுப்பி வைத்தார். அதனால் இந்த போட்டியில் திண்டாட்டமான துவக்கத்தை பெற்றுள்ள வங்கதேசம் சற்று முன் வரை 10 ஓவர்களில் 37/3 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. அந்த அணிக்கு களத்தில் லிட்டன் தாஸ் மற்றும் மஹமதுல்லா ஆகிய அனுபவ வீரர்கள் தங்களுடைய தரத்தை காட்டி சரிவை சரி செய்ய போராடுகின்றனர்.

இதையும் படிங்க: என்னை பொறுத்த வரை.. அதுல சச்சினை ஆல்ரெடி விராட் கோலி மிஞ்சிட்டாரு.. கிரேம் ஸ்மித் வெளிப்படை

மறுபுறம் உலகக்கோப்பை வரலாற்றிலேயே 4 தொடர்ச்சியான தோல்விகளை முதல் முறையாக பதிவு செய்து மோசமான சாதனை படைத்துள்ள பாகிஸ்தான் இந்த நல்ல துவக்கத்தை பயன்படுத்தி வங்கதேசத்தை சுருட்டுவதற்கு போராடி வருகிறது. குறிப்பாக கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் பாகிஸ்தான் விளையாடிக் கொண்டிருக்கிறது.

Advertisement