- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸி ஒருநாள் தொடருடன் விராட், ரோஹித் சர்மா ஓய்வு பெறுகிறார்களா? ராஜிவ் சுக்லா பேட்டி

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடைசியாக ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்தது. அதனால் 2027 உலகக் கோப்பையில் ரோஹித் தலைமையில் இந்தியா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியாது என்று கருதும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அதன் காரணமாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2027 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா தொடருடன் விராட், ரோஹித் கழற்றி விடப்பட உள்ளதாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

கடைசி தொடரா:

அதற்குத் தகுந்தாற்போல் தற்போது ரோஹித் சர்மாவிடமிருந்து கேப்டன்ஷிப் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா தொடருடன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவுக்காக விராட், ரோஹித் கடைசியாக விளையாடப் போகிறார்களா? என்ற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விராட், ரோஹித் ஆஸ்திரேலிய தொடருடன் ஓய்வு பெறுவார்கள் என்று வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கேட்டுக் கொண்டுள்ளார். தங்களைப் பொறுத்த வரை அவர்களுடைய அனுபவம் இந்திய அணிக்கு பலமாக அமையும் என்று அவருக்கு கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பிசிசிஐ மறுப்பு:

“அவர்கள் விளையாடுவது எங்களுக்கு நிறைய பயனை கொடுக்கும். அவர்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள். அவர்கள் அணியில் இருந்த போது வெற்றிகரமாக நாங்கள் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் தோற்கடித்தோம். எனவே இதுவே அவர்களுடைய கடைசி தொடர் என்று சொல்வது முற்றிலும் தவறானது. எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அந்தந்த வீரர்களை பொறுத்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க: உலகத்துக்கு தேவை.. இந்திய அணிக்கு அழைப்பு.. துவண்டு கிடக்கும் வெ.இ அணிக்கு கம்பீர் உத்வேக ஸ்பீச்

இதற்கிடையே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட், ரோஹித் விளையாட விரும்பினார்கள். அதற்கு முன்பாக அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்ததாக செய்திகள் வெளியானது. அடுத்த சில தினங்களில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுடைய ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -