ரசிகர்கள் திட்டுவாங்கன்னு தெரிஞ்சே பாண்டியா அதை செஞ்சாரு.. யாரையும் ரோஹித் தூண்டி விடல.. ராஜிவ் சுக்லா

Rajiv Shukla 2
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனைப் படைத்துள்ளது. அந்த 5 கோப்பைகளையும் மும்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்தார். அப்படிப்பட்ட அவரை 2024இல் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்கி தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்தது.

அதற்கு முன் ரோஹித் தலைமையில் மும்பை அணியில் விளையாடி வெற்றிகளில் பங்காற்றிய ஹர்திக் பாண்டியா 2022 ஐபிஎல் கோப்பையை குஜராத் கேப்டனாக கோப்பையை வென்றார். அதன் காரணமாக அவரை டிரேடிங் முறையில் வாங்கிய மும்பை தங்களுடைய கேப்டனாக அறிவித்தது. ஆனால் அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

- Advertisement -

தெரிஞ்சே செஞ்சாரு:

குறிப்பாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த நன்றி மறந்து ரோஹித்தை கழற்றி விட்ட மும்பை அணியை ரசிகர்கள் சாடினார்கள். போதாகுறைக்கு ஹர்திக் பாண்டியா களத்தில் ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்ய வைத்தது ரசிகர்களின் கோபத்தில் எண்ணையை ஊற்றியது. அதனால் கொந்தளித்த மும்பை ரசிகர்கள் தங்களுடைய அணியின் கேப்டன் என்பதையும் தாண்டி மைதானத்தில் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டனர்.

அதன் உச்சமாக மும்பை வான்கடே மைதானத்தில் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்ட ரசிகர்களை “கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்” என்று தொகுப்பாளர் சஞ்சய் மஞ்ரேக்கர் சாடினார். மொத்தத்தில் சொந்த ரசிகர்கள் எதிர்ப்புடன் பாண்டியா தலைமையில் மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் படித்தது. இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் தலைமையில் இந்தியா வெல்ல பாண்டியா முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அசத்துனா ரசிகர்கள் பாராட்டுவாங்க:

அதனால் கோபத்தை விட்ட மும்பை ரசிகர்கள் கடந்த சீசனில் பாண்டியாவுக்கு ஆதரவு கொடுத்தனர். இந்நிலையில் ரோஹித்துக்கு பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டால் மும்பை ரசிகர்கள் திட்டுவார்கள் என்பது தெரிந்தே பாண்டியா ஒப்புக்கொண்டதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுற்றுலா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது போன்ற விஷயங்கள் நடைபெறும் போது பிசிசிஐ சார்பில் அந்த வீரரை அணுகி எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று சொல்வோம்”

இதையும் படிங்க: 2013லயே பும்ராவின் ஆபத்தான பவுலிங் ஆக்சனை மாற்ற முயற்சித்து .. இந்த காரணத்தால் விட்டுட்டோம்.. பரத் அருண்

“ரோஹித் ரசிகர்கள் பாண்டியா கேப்டனாக வந்ததை விரும்பவில்லை. ஆனால் அந்த விஷயம் முடிந்து விட்டது. ரோகித் யாரையும் தூண்டி விடவில்லை. அது போன்ற விஷயங்கள் நடக்கும் என்று தெரியும் அளவுக்கு பாண்டியா முதிர்சியுடன் இருந்தார். ரசிகர்களின் எதிர்ப்பை தன்னை பாதிக்காமல் பார்த்துக் கொண்ட அவர் எதையும் உணர்வுபூர்வமாக எடுத்துக் கொள்ளவில்லை. நாளடைவில் அதே ரசிகர்கள் நீங்கள் நன்றாக செயல்படும் போது பாராட்டத் துவங்குவார்கள்” என்று கூறினார்

Advertisement