இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 2016ஆம் ஆண்டு எம்.எஸ். தோனி தலைமையில் அறிமுகமானார். மற்ற பவுலர்களைப் போல் அல்லாமல் மிகவும் வித்தியாசமாக ஓடிவந்த அவர் தனித்துவமான ஆக்சனை வைத்து பவுலிங் செய்தார். அவருடைய தனித்துவமான ஆக்சனை இன்று வரை உலகின் டாப் பேட்ஸ்மேன்கள் சரியாக கணிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
ஆனால் அந்த ஆக்சனை வைத்துக்கொண்டு பும்ராவால் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்ற கணிப்புகள் வந்தன. இருப்பினும் 2018ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இன்று ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கிறார். அந்தளவுக்கு கடந்த 7 வருடங்களாக மிகச்சிறப்பாக பவுலிங் செய்யும் பும்ரா இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
ஆபத்தான ஆக்சன்:
எந்தளவுக்கு அந்த பவுலிங் ஆக்சன் ஜஸ்ப்ரித் பும்ராவை தனித்துவமாக காண்பிக்கிறதோ அந்தளவுக்கு அவரை காயப்படுத்துவதாகவும் செய்கிறது. ஏனெனில் அந்த தனித்துவமான பவுலிங் ஆக்சனால் முதுகில் காயத்தைச் சந்தித்த அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதனால் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் 2 முறை 5 விக்கெட்டுகள் எடுத்தும் இந்தியா வெற்றி காணவில்லை.
அதனால் இந்தியாவை சேர்ந்த பல முன்னாள் வீரர்கள் அவரை விமர்சித்தனர். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவின் ஆபத்தான பவுலிங் ஆக்சனை 2013லயே மாற்ற முயற்சி செய்ததாக இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். ஆனால் அதில் குறைவான வேகம் மட்டுமே கிடைத்ததால் அப்படியே விட்டு விட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
வேகம் கிடைக்கல:
“2013இல் அண்டர்-19 முகாமிலிருந்து என்சிஏ’வுக்கு வந்த பும்ரா விளையாடத் தேர்வானார். இருப்பினும் அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெறாத அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் டாப் 30 உறுப்பினர்களில் ஒருவராக தேர்வானார். அந்த சமயத்தில் நியாயமான முறையில் நாங்களும் அவருடைய ஆக்சனை மாற்ற முயற்சித்தோம். அவரும் தன்னுடைய ஆக்சனை மாற்றி அமைத்தார்”
இதையும் படிங்க: அவர் என்மேல வச்சிருக்க நம்பிக்கை தான் நான் இந்திய அணியில் இருக்க காரணம் – ரிங்கு சிங் பேட்டி
“புதிய ஆக்சனும் நன்றாக இருந்தது. ஆனால் பந்து வேகமாக செல்லவில்லை. அப்படி நீங்கள் வீசும் பந்துகளில் தாக்கம் இல்லையென்றால் ஆக்சனை மட்டும் மாற்றுவதில் என்ன பயன்? அதனால் பும்ராவின் ஆக்சனில் கை வைக்க விரும்பவில்லை என்று நாங்கள் உடல் பயிற்சியாளர்கள் மற்றும் ஸ்ட்ரென்த் கண்டிஷனிங் பயிற்சியாளரிடம் சொன்னோம். ஏனெனில் அது மிகவும் தனித்துவமானது. நிறைய வேகத்தை கொடுக்கக்கூடியது. அதே சமயம் அது உங்களுடைய உடலில் பெரிய அழுத்தத்தை உண்டாக்கக்கூடியது” என்று கூறினார்.



