ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்கும் 2025 ஆம் ஆண்டிற்கான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வேளையில் இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தங்களது அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டன.
எனக்கு சூரியகுமார் யாதவ் ரொம்ப ஆதரவாக இருக்கிறார் : ரிங்கு சிங்
இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அண்மையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் இந்திய அணி இந்தியாவிலிருந்து துபாய் புறப்பட்டு செல்லும் என்று தெரிகிறது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங்கிற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரிங்கு சிங் இதுவரை இந்திய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அவர் தனக்கு இந்திய அணியில் சூரியகுமார் யாதவிடம் இருந்து அதிக ஆதரவு கிடைப்பதாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் எப்போதுமே என்னை ஆதரிக்கும் ஒருவராக இருக்கிறார்.
களத்தில் என்னை எப்போதுமே உற்சாகப்படுத்தும் அவர் களத்திற்கு வெளியேயும் பல நம்பிக்கையான வார்த்தைகளை கூறுவார். கௌதம் கம்பீர் எங்களை எவ்வாறு சுதந்திரமாக செயல்பட ஆதரிக்கிறாரோ அதேபோன்று சூரியகுமா யாதவும் எங்களுடைய திறனை வெளிக்காட்ட முழு சுதந்திரம் அளிக்கிறார். அவர் கொடுக்கும் ஆதரவில் தான் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது.
இதையும் படிங்க : இந்திய அணியில் அவங்க 2 பேரையும் நீங்க ரொம்ப நாள் ஒதுக்க முடியாது.. கதவை உடைத்து வருவாங்க – ராகுல் சர்மா கருத்து
நான் இந்திய அணியில் சூரியகுமார் யாதவின் கேப்டன்சியின் கீழ் தான் தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன். என்னுடைய ரோல் என்ன? என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதனால் தான் தொடர்ச்சியாக எனக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது என ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



