கே.எல் ராகுலின் விலகல் காரணமாக சொதப்பல் வீரருக்கு அடித்த லக் – நான்காவது போட்டியிலும் விளையாட வாய்ப்பு

KL-Rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதனை தொடர்ந்து முதல் போட்டியில் அடைந்த காயம் காரணமாக இரண்டாவது போட்டியிலிருந்து வெளியேறிய அவர் எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது மீண்டும் கம்பேக் கொடுத்து இருந்தார்.

இதன் காரணமாக தற்போது முன்னணி வீரர்கள் இன்றி தவிக்கும் இந்திய அணியில் அவர் தொடர்ச்சியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்றாவது போட்டிக்கு முன்னதாக முழுஉடற்தகுதியை எட்டாத ராகுல் கடைசி நேரத்தில் தான் விளையாட போவதில்லை என்று அறிவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டியிலாவது அவர் பங்கேற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் நான்காவது போட்டிக்கு முன்பாகவும் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை என்று அறிவித்துள்ளார். இதன் காரணமாக அவரது இடத்தில் சொதப்பலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ரஜத் பட்டிதாரே தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது விராட் கோலி விலகல் காரணமாக இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ரஜத் பட்டிதார் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடி முறையை 32, 9, 5, 0 என்கிற அளவில் சொற்ப ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்துள்ளார்.

- Advertisement -

இப்படி தனக்கு கிடைத்த முதல் இரண்டு போட்டிகளிலுமே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் கையில் கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்தார். இதன் காரணமாக நிச்சயம் அவர் விரைவில் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கே.எல் ராகுல் விலகல் காரணமாக அவருக்கு மீண்டும் நான்காவது போட்டியில் விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலி தனது மகனுக்கு அக்காய் என்று பெயரிட என்ன காரணம்? – அந்த பெயருக்கு பின்னால் இருக்கும் காரணம்

இனியும் அவரது பெயர் டெஸ்ட் போட்டிக்கான அணியில் பரிசளிக்கப்பட வேண்டுமெனில் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் இந்த நான்காவது போட்டியில் ஒரு சதமோ அல்லது இரட்டை சதமோ அடித்தால் மட்டுமே அவரை எதிர்காலத்தில் டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய நிர்வாகம் யோசிக்கும் என்றும் ஒருவேளை அவர் நான்காவது போட்டியிலும் சொதாப்பினால் நிச்சயம் இனி வரும் காலங்களில் அவர் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement