விராட் கோலி தனது மகனுக்கு அக்காய் என்று பெயரிட என்ன காரணம்? – அந்த பெயருக்கு பின்னால் இருக்கும் காரணம்

Anushka
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். அவர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிறகு பிசிசிஐ-யையும் விராட் கோலிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்து அவர் குறித்த எந்த யூகத்தையும் பகிர வேண்டாம் என்றும் ரசிகர்களை கேட்டுக் கொண்டது.

அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்ட போதும் விராட் கோலி அதிலிருந்து வெளியேறினார். இப்படி ஒரு தொடர் முழுவதுமே விளையாடாமல் விராட் கோலி விடுப்பு எடுத்துக் கொண்டது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியது. இந்த நேரத்தில் அவர் எதற்காக இப்படி செய்தார்? என்பது குறித்த பல கருத்துக்கள் சமூக வலைதளத்தில் வதந்திகளாக பரவி வந்தன.

- Advertisement -

ஆனால் இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று விராட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததை அறிவித்து இந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2017-ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு வாமிகா என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்திருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்படி விராட் கோலி அறிவித்துள்ள அந்த பதிவில் குறிப்பிட்டதாவது : மனம் நிறைந்த அன்பினால் உங்கள் அனைவருக்கும் இதனை தெரிவிக்க விரும்புகிறோம். பிப்ரவரி 15-ஆம் தேதி எங்களுடைய ஆண் குழந்தை அக்காயையும், வாமிகாவின் குட்டி சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் அவர் இரண்டாவது குழந்தைக்காக தான் விடுப்பு எடுத்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தனது மகனுக்கு “அக்காய்” என்கிற பெயரை கோலி இட்டதும் அந்தப் பெயர் குறித்த பொருள் என்ன? என்பது குறித்து தேடல் அனைவரது மத்தியிலும் எழுந்தது. இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக நாங்கள் அந்தப் பெயர் காரணத்திற்கான சில தகவல்களை இங்கே பகிர்ந்து உள்ளோம். அந்த வகையில் “அக்காய்” என்பது இந்தி வார்த்தை. அந்த வார்த்தையின் மூலச்சொல் துருக்கி மொழியில் இருந்து வந்தது.

இதையும் படிங்க : இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததை முறைப்படி அறிவித்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா – பெயர் என்ன தெரியுமா?

“அக்காய்” என்பதன் பொருள் யாதெனில் : ஜொலிக்கும் நிலவு (Shining Moon). இந்த பெயரினை ஆண் குழந்தைக்கும் வைக்கலாம், பெண் குழந்தைக்கும் வைக்கலாம். இரு பாலருக்குமான பெயர் இது. சமஸ்கிருதத்தில் “அக்காய்” என்கிற சொல்லிற்கு பொருள் யாதெனில் : உடலும் உருவமும் அற்றவன். அதேபோன்று இந்த பெயருக்கு வழிகாட்டுபவன் காப்பான் என்ற அர்த்தமும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisement