இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததை முறைப்படி அறிவித்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா – பெயர் என்ன தெரியுமா?

Anushka
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இடம் பிடித்திருந்தார். ஆனால் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் உள்ளதாக அவர் முதல் இரண்டு போட்டிகளிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து பிசிசிஐ-யையும் அவரது வெளியேற்றத்தை ஒரு தகவலாக வெளியிட்டு உறுதி செய்திருந்தது.

மேலும் விராட் கோலி தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதாலேயே இந்த விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரது தனிப்பட்ட இந்த முடிவை மதித்து அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் தவறான எவ்வித யூகங்களையும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது.

- Advertisement -

இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் விராட் கோலி தனது இரண்டாவது குழந்தை பிறப்பின் காரணமாகவே இந்த தொடரில் இருந்து விலகியதாக தெரிவித்திருந்தார். பின்னர் தான் கூறிய அந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்டிருந்தார். அதேபோன்று இந்த தொடரின் எஞ்சிய மூன்று போட்டிகள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும் போது விராட் கோலி வெளியேறி இருந்தார்.

இப்படி தனது டெஸ்ட் கிரிக்கெட் கரியரின் ஒரு தொடரில் கூட விராட் கோலி விடுப்பு எடுக்காத வேளையில் தற்போது எடுக்கப்பட்ட இந்த விடுப்பு மிக முக்கியமான ஒன்றாகத்தான் இருக்கும் என்று பேசப்பட்டு வந்த வேளையில் இன்று விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் அதிகாரபூர்வமாக தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததை உறுதி செய்துள்ளனர்.

- Advertisement -

மேலும் இந்த இரண்டாவது குழந்தை அழகிய ஆண் குழந்தை என்றும் அவருக்கு “அகாய்” என்றும் பெயர் இட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி அவர்கள் வெளியிட்டுள்ள அந்த குறிப்பில் : கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் இந்த பகிர்வை உங்களுக்காக பகிர்ந்து கொள்கிறோம்.

இதையும் படிங்க : கம்பீருடன் அப்படி நடந்துருக்கக் கூடாது.. அதனால என்னோட இமேஜ் கெட்டுப்போச்சு.. 2015 சம்பவத்தால் மனோஜ் திவாரி வருத்தம்

இந்த நேரத்தில் உங்கள் அனைவரது அன்பு மற்றும் வாழ்த்துக்களை எதிர்நோக்கி இருக்கிறோம் மேலும் இந்த நேரத்தில் எங்களது தனிமைக்கு மரியாதை அளிக்கும் படியும் கேட்டுக்கொள்கிறோம். என்றும் அன்புடனும், நன்றியுடனும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா என்று குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement