கம்பீருடன் அப்படி நடந்துருக்கக் கூடாது.. அதனால என்னோட இமேஜ் கெட்டுப்போச்சு.. 2015 சம்பவத்தால் மனோஜ் திவாரி வருத்தம்

Manoj Tiwari 2
- Advertisement -

பெங்கால் அணியை சேர்ந்த வீரர் மனோஜ் திவாரி சில தினங்களுக்கு முன்பாக அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவருக்கு சீனியர் வீரர்கள் இருந்ததால் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் 2011 உலகக் கோப்பைக்குப் பின் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் தொடர்ச்சியாக அசத்தத் தவறிய அவர் ஐபிஎல் தொடரிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதனால் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி இவரை கழற்றி விட்டு ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்தார். அந்த வகையில் இந்திய அணியில் வாய்ப்பை இழந்த மனோஜ் திவாரி கொல்கத்தாவில் அரசியலில் ஈடுபட்டு விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்படி அமைச்சராக பொறுப்பேற்ற பின்பும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வந்த அவர் 10000 ரன்கள் குவித்த பின் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

- Advertisement -

கம்பீருடன் சண்டை:
அந்த நிலையில் சுமாராக செயல்பட்டும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை தமக்கு கொடுக்காதது ஏன் என்று தோனியிடம் விரைவில் கேட்கப் போவதாக மனோஜ் திவாரி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2015ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ரஞ்சிக்கோப்பை போட்டியில் கௌதம் கம்பீருடன் சண்டை போட்டது நினைத்து வருந்துவதாக மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

அந்தப் போட்டியில் தொப்பியுடன் பேட்டிங் செய்வதற்காக வந்த மனோஜ் திவாரி பின்னர் வேகப்பந்து வீச்சாளர் பந்து வீச வருகிறார் என்பது தெரிந்ததால் ஹெல்மெட் கொடுக்குமாறு தன்னுடைய அணியிடம் கேட்டார். அப்போது வேண்டுமென்றே கால தாமதம் செய்வதாக கடுப்பான கம்பீருக்கும் அவருக்கும் சண்டை நடந்தது.

- Advertisement -

தற்போது அந்த சண்டையால் தம்முடைய பெயர் கெட்டுப் போய் விட்டதாக தெரிவிக்கும் மனோஜ் திவாரி இது பற்றி பேசியது பின்வருமாறு. “அன்று கம்பீருடன் நான் நடத்திய சண்டை தான் எனக்கு ஒரே ஒரு வருத்தம். ஏனெனில் நான் வெளியே சென்று சீனியர் வீரருடன் சண்டையிடும் நபர் கிடையாது என்று என்னை அறிந்தவர்கள் சொல்வார்கள். எனவே நான் தவிர்த்திருக்க வேண்டிய நினைவுகளில் அதுவும் ஒன்று”

இதையும் படிங்க: சேவாக்குடன் அந்த இந்திய ஜாம்பவான் வீரரும் சேர்ந்த கலவை தான் ஜெய்ஸ்வால்.. டேனிஷ் கனேரியா பாராட்டு

“சீனியர் வீரருடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. ஆனால் அந்த ஒரு சம்பவத்தால் என் இமேஜ் கெட்டு விட்டது. நாளடைவில் நாங்கள் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஒன்றாக சேர்ந்து விளையாடியதாலேயே அந்த சண்டையை நினைத்து வருத்தப்படுகிறேன் என்று சொன்னேன்” எனக் கூறினார். இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கிரிக்கெட் அணியின் ஆலோசகராக கம்பீர் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement