சேவாக்குடன் அந்த இந்திய ஜாம்பவான் வீரரும் சேர்ந்த கலவை தான் ஜெய்ஸ்வால்.. டேனிஷ் கனேரியா பாராட்டு

Danish Kaneria
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் யசஸ்வி ஜெய்ஸ்வால் 545* ரன்கள் குவித்துள்ளார். இத்தனைக்கும் வெறும் 22 வயதாகும் அவர் கேப்டன் ரோகித் சர்மா போன்ற மற்ற வீரர்களை விட சிறப்பாக செயல்பட்டு இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் அடிக்காத போது தனி ஒருவனாக இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய அவர் 209 ரன்கள் குவித்தார். மேலும் ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது போட்டியில் அழுத்தமான இரண்டாவது இன்னிங்ஸில் அட்டகாசமாக விளையாடிய அவர் 214* ரன்கள் விளாசினார்.

- Advertisement -

ஜாம்பவான்களின் கலவை:
அதிலும் குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு அனைவரையும் வியப்பில் வாழ்த்திய அவர் மொத்தம் 12 சிக்சர்கள் அடித்து ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். அத்துடன் ஜாம்பவான் சேவாக் போல 50, 100, 150, 200 ரன்களை பவுண்டரி அல்லது சிக்சர்களால் தொட்ட அவர் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

அதனால் குவிந்து வரும் நிறைய பாராட்டுகளுக்கு மத்தியில் ஜெய்ஸ்வால் தான் இந்திய அணியின் புதிய வீரர் சேவாக் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்தில் பாராட்டியிருந்தார். இந்நிலையில் வீரேந்திர சேவாக் மற்றும் சௌரவ் கங்குலி ஆகிய 2 இந்திய ஜாம்பவான்களின் கலவையை போல் ஜெய்ஸ்வால் விளையாடுவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா வியப்பான பாராட்டை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சௌரவ் கங்குலி மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் கலந்த கலவையாக யசஸ்வி ஜெய்ஸ்வால் திகழ்கிறார். குறிப்பாக இடது கை பேட்ஸ்மேனாக வீரேந்திர சேவாக் விளையாடினால் எப்படி இருக்குமோ அப்படி அவர் செயல்படுகிறார். ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 700 விக்கெட்டுகள் எடுத்த மகத்தான பவுலர்”

இதையும் படிங்க: 4வது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு.. கேஎல் ராகுல் விளையாடுவாரா? அதிகாரப்பூர்வ மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ

“அவர் தன்னுடைய அனுபவத்தை வைத்து ஜெய்ஸ்வாலுக்கு வலையை விரிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தினார். ஆனால் இந்த குழந்தை விளையாட்டை நன்றாக உணர்ந்து அந்த வலையை அடித்து நொறுக்கியது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2 – 1* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் இத்தொடரின் நான்காவது போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement