விராட் கோலிக்காக கோப்பையை வெல்வோம்.. பஞ்சாப்பை விட அது ஆர்சிபிக்கு நிறைய கிடைக்கும்.. படிதார் உறுதி

Rajat patidar RCB 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெறும் அப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. வரலாற்றில் அவ்விரு அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை வென்றது கிடையாது. அதனால் இம்முறை சிறப்பாக விளையாடி முதல் கோப்பையை முத்தமிடப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

பஞ்சாப் அணியைப் பொறுத்த வரை 2014க்குப்பின் வரலாற்றில் 2வது முறையாக இறுதிப் போட்டியில் தகுதி பெற்றுள்ளது. இம்முறை அந்த அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அபாரமாக விளையாடி ஃபைனல் வந்துள்ளது. எனவே இந்த 2வது வாய்ப்பில் எப்படியாவது கோப்பையை வென்று 17 காத்திருப்பை முறியடிக்க பஞ்சாப் அணி தயாராக உள்ளது.

- Advertisement -

கோலிக்காக ஜெய்ப்போம்:

மறுபுறம் காலம் காலமாக கிண்டல்களை சந்தித்து வரும் பெங்களூரு அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. 2009, 2011, 2016 வருடங்களில் ஃபைனல் வரை சென்று கோப்பையை கோட்டை விட்ட பெங்களூரு இம்முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்லத் தயாராக இருக்கிறது. அப்படி வென்றுவிட்டால் அதை ஆர்சிபி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுவதற்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 2025 ஐபிஎல் கோப்பையை விராட் கோலிக்காக வெல்வோம் என்று ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்தியா மற்றும் ஆர்சிபி அணிக்காக பல வருடங்களாக விராட் கோலி ஏராளமான வெற்றிகளில் பங்காற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுவான இடமான அகமதாபாத்தில் வெறித்தனமான ஆர்சிபி ரசிகர்களால் பஞ்சாப்பை விட தங்களுக்கு அதிகப்படியான ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

படிதார் உறுதி:

இது பற்றி படிதார் பேசியது பின்வருமாறு. “நாங்கள் இந்தக் கோப்பையை விராட் கோலிக்காக வெல்ல முயற்சி செய்வோம். அவர் இந்தியா மற்றும் ஆர்சிபி அணிக்காக பல வருடங்களாக சிறப்பாக விளையாடி பங்காற்றியுள்ளார். பெங்களூரு போன்ற அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்லும் போது உங்கள் மீது இயற்கையாக அதிகப்படியான எதிர்பார்ப்பு இருக்கும்”

இதையும் படிங்க: இறுதிப்போட்டிக்கான ஆர்.சி.பி அணிக்கு திரும்பும் அதிரடி வீரர்.. வெற்றி உறுதி – விவரம் இதோ

“ஆனால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் நான் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்கள் மீது கவனம் செலுத்தி நிகழ்காலத்தில் இருக்க முயற்சிக்கிறேன். இந்த கேப்டன்ஷிப் பயணம் எனக்கு நல்ல கற்றல் மற்றும் அனுபவமாக இருக்கிறது. நாங்கள் எங்கே சென்றாலும் அந்த மைதானம் எங்களுடைய சொந்த ஊர் போல உணர்வோம். ஏனெனில் எங்களுடைய ரசிகர்கள் அந்தளவுக்கு பல வருடங்களாக அன்பையும் ஆதரவையும் கொடுத்து வருகின்றனர்” என்று கூறினார்

Advertisement