இறுதிப்போட்டிக்கான ஆர்.சி.பி அணிக்கு திரும்பும் அதிரடி வீரர்.. வெற்றி உறுதி – விவரம் இதோ

RCB
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் இரவு 7:30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டத்தில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் நரேந்திர மோடி மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இறுதிப்போட்டிக்கான ஆர்.சி.பி அணிக்கு திரும்பும் அதிரடி வீரர் :

இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட இருப்பதினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் என்பதனால் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்கிற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்டமானது பெரும் வரவேற்பிற்கு மத்தியில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை கைப்பற்ற காத்திருக்கும் ஆர்சிபி அணி நிச்சயம் இம்முறை கோப்பை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் பெங்களூரு அணி நிச்சயம் இறுதி போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அளவிற்கு பலமாகவே உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அந்த அணிக்கு தற்போது கூடுதல் பலத்தை சேர்க்கும் வகையில் அதிரடி வீரரான டிம் டேவிட் அணிக்கு திரும்ப இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆட்டங்களாக தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக டிம் டேவிட் விளையாடாமல் இருந்து வந்த நிலையில் நிச்சயம் இறுதி போட்டியில் அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அப்படி அவர் விளையாடும் பட்சத்தில் ஆர்சிபி அணிக்கு அது கூடுதல் பலம் என்று கூறலாம்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025 ஃபைனலில் மழை வருமா? ரத்தானால் கோப்பை யாருக்கு? வெதர் ரிப்போர்ட் – ரூல்ஸ் இதோ

ஏனெனில் இந்த சீசனில் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 185 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 187 ரன்களை குவித்துள்ளார். இறுதி நேரத்தில் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் அவர் போட்டியை ஒரே ஓவரில் மாற்றக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அதனால் அவரது வருகை ஆர்சிபி அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement